தமிழ்நாட்டில்
சிறுபான்மையினர்களாக கருதப்படும் இசுலாமியர்கள், கிருஸ்த்துவர்கள், சீக்கியர்கள், புத்த
மதத்தினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம்
மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்களை தமிழ்நாடு
சிர்பான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் செயல்படுத்தி வருகின்றது.
தனி நபர் கடன் திட்டம்:
ü இத்திட்டத்தின் கீழ் வியாபாரம், தொழில் தொடங்கிடவும்
மற்றும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன்
அளிக்கபடுகிறது.
ü சில்லறை வியாபாரம், மரபுவழி சார்ந்த தொழில்கள், சேவை
சார்ந்த தொழில் நிலையங்கள்,
ü இலகுரக போக்குவரத்து வாகன கடன்,
ü விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்ய கடன் வழங்கபடுகிறது.
கடன் தொகையின் அளவு:
நபர் ஒருவருக்கு அதிக பட்சம் ரூ.10 இலட்சம் கடனுதவி வழங்கப்படும். ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் வழங்கபடும் கடன் தொகையில் 50% முதலில் கடன் வழங்கப்படும். மீதமுள்ள 50% கடன் தொகை, முன்பு வழங்கப்பட்ட கடன் தொகை முழுமையாக
உபயோகப்படுத்த பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்த பின் விடுவிக்கப்படும்.
வட்டி விகிதம் ஆண்டிற்கு 6%
கடனை திருப்பி செலுத்தும் கால வரம்பு:
கடன் தொகையை வட்டியுடன் அதிகபட்சம் 60 மாத தவணைகளில் சம்பத்தப்பட்ட வங்கிகளுக்கு
உரிய தேதியில் செலுத்திட வேண்டும்.
அபராத வட்டி:
கடன் தவணைத் தொகையை செலுத்த தவறினால் 5% அபராத வட்டி பயனாளியிடமிருந்து வசூலிக்கப்படும்.
கடன் பெற பொதுவான தகுதிகள்:
Ø பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் நகர்புறத்தில்
வசிப்பவராக இருப்பின் ரூ.1,03,000க்கு மேற்படாமலும், கிராமப்புறத்தில் வசிப்பவராக
இருப்பின் ரூ.81,000க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
Ø விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
Ø ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன்
வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான
ஆவணங்கள்:
ü சாதிச்
சான்றிதல் / பள்ளி மாற்றுச் சான்றிதல் நகல்
ü வருமான
சான்றிதல் நகல்
ü குடும்ப
அட்டை / இருப்பிட சான்று நகல்
ü கடன்
பெரும் தொழில் குறித்த விபரம்
ü திட்ட
அறிக்கை
ü ஓட்டுனர்
உரிமம் நகல் (வாகன கடனுக்கு மட்டும்)
ü கூட்டுறவு
வங்கி கோரும் இதர ஆவணங்கள்
கடன்
வழங்கும் முறை:
விண்ணப்பிக்கப்பட்ட
விண்ணப்பம் கூட்டுறவு வங்கியின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்பட்டு உரிய
பரிந்துரையுடன் டாம்கோ-வால் பெறப்பட்டு ஒப்பளிக்கப்பட்டு கடன் தொகையை
சம்பத்தப்பட்ட வங்கி மூலமாக வழங்கப்படும்.
ஆட்டோ
கடன்:
இத்திட்டத்தின்
கீழ் சிறுபான்மையினர்களுக்கு சுயதொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம்
ஆட்டோ வழங்கபடுகிறது. இக்கடன் தனிநபர் கடன் விதிமுறைகள் அடிப்படையில் தாய்கோ வங்கி
மூலம் அளிக்கபடுகிறது.
ஆட்டோ
கடன் தொகையில் 5 சதவீத தொகையை பயனாளிகள் பங்குத் தொகையாக
செலுத்த வேண்டும். கடன் தொகை திரும்ப செலுத்தும் காலம் அதிக பட்சம் 4 வருடங்கள் (48 மாதங்கள்).
வட்டி விகிதம் ஆண்டிற்கு 6%.
சிறுகடன் திட்டம்:
சிறுபான்மை
மக்கள் சுய உதவி குழுக்களை அமைத்து தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து சிறு வியாபாரம்/
சிறு தொழில் செய்து தங்களது வருமானத்தை பெருக்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்
கொள்ளும் வகையில் ஆண்டிற்கு 6% என்ற குறைந்த
வட்டியில் சிறுகடன் நபர் ஒருவருக்கு ரூ.50,000/-க்கு மிகாமல் வழங்கும் சிறப்புமிகு திட்டம்
டாம்கோ கழகத்தால் செயல்படுத்தபட்டு வருகிறது.
தொழில்கள்:
காய்கறி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலகாரக்
கடை, தையல் கடை, கைத்தொழில்கள், சிறு வணிகம் போன்றவை.
தகுதிகள்:
பயனாளி,
சிறுபான்மை சுயவுதவி குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும். மேலும் அந்த குழு
குறைந்தது ஆறு மாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக
செயல்பட்டு இருக்க வேண்டும்.
சிறுபான்மை
சுயவுதவி குழுவில் இருக்கும் உறுப்பினருக்கு அதிகபட்சமாக கடன் தொகை ரூ.50,000/-. ஆண்டிற்கு 6% என்ற குறைந்த
வட்டியில் கடன் அளிக்கப்படும்.
விண்ணப்ப
படிவம்:
மேற்படி
கடன் உதவி கோரும் விண்ணப்ப படிவம் எவ்வித கட்டணமும் இன்றி மாவட்ட மத்திய/ நகர
கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
அலுவலகங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்
அலுவலகங்கள் மற்றும் டாம்கோ அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்
முறை:
மேற்படி
கடனுதவி திட்டங்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அனைத்து சான்று
ஆவணங்களுடன் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் அலுவலகங்கள் அல்லது மாவட்ட மத்திய/ நகர கூட்டுறவு வங்கி கிளைகள்
அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம்
விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விபரங்களுக்கு.....
சம்பத்தப்பட்ட
மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலரிடமோ அல்லது சம்பத்தப்பட்ட மாவட்ட மத்திய/ நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலோ
அல்லது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடமோ அணுகலாம்.
தொலைப்பேசி:
044 – 28514846
கடன் பெற
தேவையான தொழில் திட்ட அறிக்கைகள் தேவைப்பட்டால்
எங்களை அணுகலாம்...!!
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross,
Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886