Complete Guidance for Business Startup

Sunday, 23 February 2020

MSME/SSI (UDYOG AADHAR) மத்திய அரசின் குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்தல்



நம்முடைய உற்பத்தி மற்றும் சேவைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய அரசின் உத்யோக் ஆதார் பதிவு பெற்று நடத்தலாம். இந்த பதிவினால் நம்மால் பல்வேறு வகையான அரசு மானியங்கள், சலுகைகள் மற்றும் சான்றிதல்கள் எளிய முறையில் பெற்று தொழிலை சிறப்பாக நடத்தலாம்.

நீங்கள் உற்பத்தி, சேவை சார்ந்த தொழில் செய்பவரா..? அப்படியென்றால் தங்கள் தொழிலை குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்து உள்ளீர்களா..? இப்போதே உங்கள் நிறுவனத்தை இதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.



இதுவரை நீங்கள் தொழில் நிறுவனங்களை பழைய முறையான SSI என்னும் முறையில் பதிவு செய்து இருப்பீர்கள் அல்லது பதிவு செய்யாமல் இருந்துருப்பீர்கள். ஆனால் தற்போது மத்திய அரசின் மூலம் குறு, சிறு, மத்திய தொழில்களை உத்யோக் ஆதார் (UDYOG AADHAR for MSME) என்ற முறையில் பதிவு செய்ய வேண்டும். 

இதுவரை தங்களிடம் இருக்கும் எஸ்‌எஸ்‌ஐ(SSI) பதிவுகள் காலாவதி ஆகிவிட்டன. புதிய தொழில் துவங்குபவர்கள் தொழில் துவங்கும் முன் பதிவு செய்யும் முறை (SSI  PART- 1) இப்போது இல்லை. தொழில் துவங்கிய பின்னரே உத்யோக் ஆதார் பதிவு செய்ய வேண்டும்.

தொழில்கள் எவ்வாறு குறு,சிறு மத்திய தொழில்கள் என பட்டியலிடப் படுகின்றன..??

உற்பத்தி சார்ந்த குறு தொழில்கள் எந்திர மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு குறைவாக, சிறு தொழில்கள் இயந்திர மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை, மத்திய தொழில்கள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை  இயந்திர மதிப்பு உள்ள தொழில்களும், சேவை சார்ந்த குறு தொழில்கள் ரூ.10 லட்சம் வரை, சிறு தொழில்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை, மத்திய தொழில்கள் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை இயந்திர மதிப்பு உள்ள சேவைச் சார்ந்த தொழில்களும் இதில் பதிவு செய்து பயன் பெறலாம்.

இதில் பதிவு செய்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடக்கும்??

v  நீங்கள் வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களில் கடன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த உத்யோக ஆதார் பதிவு அவசியம்.
v  வருமான வரி தாக்கல் மற்றும் பதிவு செய்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் அவசியம்.
v  பார்கோடு வாங்குபவர்களுக்கு 75% செலவில் மானியம் மத்திய அரசின் MSME வழங்கும் இதனை பெற இந்த சான்றிதல் அவசியம்.
v  அறிவு சார் சொத்துரிமையில் காப்புரிமை பெற 50% வரை மானியம் பெற இந்த சான்றிதல் அவசியம்.
v  வங்கியில் கடன் அல்லது உங்கள் சொந்த முதலீட்டில் உற்பத்தி துறையில் தொழில் தொடங்கினால் மாநில அரசின் பல திட்டங்களில் மானியம் கிடைக்கும்.

ü  25% எந்திர மதிப்பீல் மானியம்
ü  3 ஆண்டுகள் மின்சார மானியம்

v  6 ஆண்டுகள் தாங்கள் கட்டும் வாட் வரி திரும்ப மானியமாக கிடைக்கும்.
v  மேற்கண்ட மானியங்களை பெற அவசியம் உத்யோக ஆதார் பதிவு செய்திருக்க வேண்டும்.
v  உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த துறையில் தொழில் துவங்கும் போது ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் தொழில் அதிபர்கள் எந்தவித சொத்து பிணையமும் வங்கிகளுக்கு தர தேவையில்லை. இவ்வகை தொழில்துறை கடன் பெற இந்த பதிவு மிக அவசியம். நீங்கள் கடனை திறப்பி கட்ட தவறும் பட்சத்தில் இதை அரசின் CGTMSE முலம் கட்டும்
v  ரூபாய் 2 கோடி வரை உற்பத்தி மற்றும் சேவை துறை தொழில்களுக்கு சிட்பியின் பிணையமில்லா கடன் பெற வழிவகை செய்கிறது. இதில் உங்கள் திட்டங்கள் சிறப்பாக இருக்குமானால் CGTMSE என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் பிணையமில்லா கடன்  பெற முடியும். இந்த திட்டத்தில் உதவி பெற உத்யோக் ஆதார் பதிவு செய்வது அவசியம்.
v  மின்சார இணைப்பு பெறவும், தொழில்சாலைகளுக்கான கட்டணங்களில் மின் தொகை செலுத்தவும் 3A, 3B சலுகை கட்டணங்களில் செலுத்த இந்த பதிவு அவசியம்.
v  ஜி.எஸ்.டி வரியிலும் பதிவு செய்ய முக்கிய ஆவணமாக இந்த உத்யோக் ஆதார் பார்க்கப்படும்.
v   உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி சான்று பெற உத்யோக் ஆதார் அவசியம்.
v  மத்திய அரசு உங்கள் தொழிலை அங்கீகரிக்கவும் அவர்களின் பல திட்டங்களில் பயன்பெற்று தொழில் நடத்த உங்களுக்கு இந்த உத்யோக் ஆதார் அவசியம்.
v  உத்யோக் ஆதாருடன் NSIC நிறுவனத்தில் பதிவு செய்யும் துணை நிறுவனங்களுக்கு தாய் நிறுவனத்திலிருந்து விண்ணப்ப பதிவு கட்டணம் முழுவதும் விலக்கு அளிக்கப்படும். மேலும்10% முன் பணம் கட்ட வேண்டிய முறையிலிருந்தும் விலக்கு அளிக்கபடும்.
v  பதிவு பெற்ற உங்கள் நிறுவனம் வேறு நிறுவனங்களுக்கு உற்பத்தி பொருள் விற்பனை அல்லது சேவை செய்யும் போது அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் பணத்தை கொடுக்க மறுக்கும் பட்சத்தில் இதற்காக அரசு அமைத்துள்ள கமிட்டியின் மூலம் கால தாமதத்திற்கு வட்டியுடன் உங்களின் பணத்தை பெற்று தர முடியும். இதற்கு நீங்கள் உத்யோக் ஆதார் பதிவு பெற்ற நிறுவனமாக இருத்தல் அவசியம்.
v  PF, ESI போன்ற அமைப்புகளில் பதிவு பெறவும் இவை உதவும்.
v  வங்கிகள் உங்கள் கடனை பதிவு செய்யும் போது பதிவு கட்டணம் தள்ளுபடி பெற இந்த உத்யோக் ஆதார் அவசியம்.
v  மாசு கட்டுபாட்டு வாரிய சான்று மற்றும் தர நிர்ணய சான்று பெறுவதற்கும் இந்த பதிவு அவசியம்.
v  இப்படி அனைத்து சேவைகளுக்கும் அரசு மானியம் மற்றும் கடன் உத்திரவாதம் பெற இந்த உத்யோக் ஆதார் பதிவு அவசியம்.
v  இப்போது உத்யோக் ஆதார் பதிவில் உற்பத்தி மற்றும் சேவை துறையை இதில் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.


யாரெல்லாம் பதிவு செய்யலாம்..??
ü உற்பத்தியாளர்கள் (Manufacturing Sector)
ü சேவை தொழில் (Service Industries)

பதிவு செய்ய தேவையான முக்கிய ஆவணங்கள்:
உங்கள் பெயர், ஆதார் எண் நிறுவனத்தின் பெயர், தொழிற்சாலை முகவரி, தொலைபேசி எண், ஈமெயில் ஐடி, வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி அடையாள எண் (IFS CODE), மொத்த முதலீடு, தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் அவசியம்.

இதில் பதிவு செய்ய ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைத்துள்ள தொலைபேசி எண் மிகவும் அவசியம். இது இருந்தால் மட்டுமே உத்யோக் ஆதாரின் இணையபக்கத்தில் நுழைய முடியும். தேவையான அனைத்து விபரங்களையும் கொடுத்த பின்னர் பதிவு செய்து அதற்கான சான்றிதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சில தொழில்கள் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு மட்டும் என அரசினால் வரையறுக்கபட்டுள்ளது. பதிவு செய்யும் போது இதனை கவனித்தில் கொண்டு பதிவு செய்தல் வேண்டும்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சிகளில் கலந்து கொள்ள குறு, சிறு தொழில்களுக்கு பல சலுகைகள் அரசினால் வழங்கபடுகிறது. உதாரணமாக பயண செலவில் 75% வரை மானியமாக கிடைக்கும். கண்காட்சி அரங்க ஸ்டால் வாடகையில் கூட மானியம் கிடைக்கும். இதற்கு உத்யோக் ஆதார் மிகவும் அவசியம்.

வேறு பெரிய நிறுவனங்களுடன் நீங்கள் போட்டி போட்டு கொண்டு நீங்கள் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கும் போது குறு தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் 15% வரை விலை அதிகமானாலும் உங்களுக்கே அந்த ஆர்டர் கிடைக்கும். இந்த பயனை பெறுவதற்கும் உத்யோக ஆதார் பதிவு அவசியம்.

அரசு பொது துறை நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கும்போது குறு, சிறு தொழில்களுக்கு தங்கள் கொடுக்கும் வெளி வேலைகளில் 20 சதவிகிதம் கொடுக்கவேண்டும் இதனால் உத்யோக் ஆதார் பதிவு மிகவும் அவசியம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இதனை பற்றிய பிற ஆலோசனைகளுக்கும் எங்களை அணுகலாம்.

Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886

No comments:

Post a Comment