இந்த திட்டத்தில் வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரையும் கடன் பெறலாம்.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை
உருவாக்க தமிழக அரசு UYEGP
(Unemployed Youth Employment Generation Programme) என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. தொழில்
தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை (Capital) இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (Unemployed Youth) தொழில் தொடங்குவதற்காக 25% சதவீதம் மானியத்துடன் ரூபாய் 1.25 லட்சம் வரை (Subsidy) அதிக பட்சம்
கிடைக்கும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூபாய் 1௦ இலட்சம் வரை கடன் (Loan) வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் நோக்கம் (Objectives):
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை
உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம்.
தொழிலின் திட்ட மதிப்பு (Project Value):
ü உற்பத்தி சார்ந்த நிறுவனமாக (Manufacturing Enterprises) இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மானியம் Rs.1,25,000/- லட்சம் வரை பெறலாம்.
ü சேவை சார்ந்த
நிறுவனமாக (Service Enterprises) இருந்தால் அதன்
திட்ட மதிப்பு (Project
Value) ரூ.5 இலட்சத்திற்குள்
இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணபிக்கலாம்.
ü வியாபாரம் சார்ந்த (Trading- Shop, Only sales Activity) நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) ரூ.5 இலட்சத்திற்குள் இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணபிக்கலாம்.
அரசு மூலதன
மானியம் (Subsidies):
தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25% சதவீதத்தை
மானியமாக (Subsidy)
அரசு அளிக்கிறது. மானியம்
Rs.1,25,000/- லட்சம் வரை பெறலாம்.
தொழில் முனைவோர் சொந்த முதலீடு (Entrepreneur Contribution of Capital
Investment) :
ü பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட
மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10% விழுக்காட்டை
தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.
ü சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட
மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை
தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது
பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினரை சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சிறப்பு பிரிவினர் என்பவர் யார்..??:
மகளிர், ஆதி திராவிடர்,
பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், திருநங்கையர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
போன்றவர்கள் இத்திட்டத்தில் சிறப்பு பிரிவினர் ஆவர்.
கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
வங்கிகள் (Banks)
மூலம் கடனுதவி பெற
பரிந்துரைக்கப்படுவர்.
குடும்ப ஆண்டு வருமான வரம்பு (Family Income):
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு
வருமானம் ரூபாய் 5,00,000-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்:
இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில்
மையங்களை (DIC-DISTRICT
INDUSTRIES CENTER) அணுகி
விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும்
அமைந்துள்ளது.
தேர்வு செய்யும் முறை (Selection
Process):
இந்த திட்டத்தின் பயனாளிகளை மாவட்ட தொழில் மையம் (DIC-DISTRICT
INDUSTRIES CENTER) தேர்ந்தெடுக்கிறது.
மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மற்றும் வங்கி மேலாளர் இணைந்த குழு தேர்வு
செய்து தேர்வு பெற்றவர்களின் விண்ணப்பங்களை உங்கள் அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு
பரிந்துரை செய்வார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தமிழ்நாடு தொழில்
முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI-ENTREPRENEUR DEVELOPMENT INSTITUTE) மூலம் ஒரு வார கால தொழில் முனைவோர்
மேம்பாட்டுப் பயிற்சி (EDP-ENTREPRENEUR DEVELOPMENT PROGRAME) வழங்கப்படும். பின்னர் UYEGP திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் தொழில்
தொடங்க நிதியுதவி பெற வங்கிகள் (Banks) மூலமாக கடனுதவி
பெற வழிவகைச் செய்யப்படுகிறது.
இதற்கு முன் மத்திய/ மாநில அரசு சார்ந்த நிதி நிறுவனங்களில் கடன் பெற்று
திரும்ப செலுத்தாமல் இருந்தாலோ அல்லது இதர மத்திய/ மாநில அரசு மூலம்
செயல்படுத்தப்படும் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி
பெற்று இருந்தாலோ UYEGP திட்டத்தில் கடன் பெற இயலாது.
தமிழக அரசு வழங்கும் குறுந்தொழில் சேவை வியாபாரம் தொடங்க மானியத்துடன் கூடிய எளிய கடன் திட்டம்:
இப்போது ஆன்லைனில் விண்ணபிக்க
வேண்டும். http://www.msmeonline.tn.gov.in/uyegp/
விண்ணப்பத்தில் நேர்காணல் போது இணைக்கபட வேண்டிய முக்கிய
ஆவணங்கள்:
நீங்கள் இந்த மாவட்டத்தில் தான் மூன்று வருடத்திற்கு மேலாக தங்கி உள்ளேன்
என்பதற்கான சான்று 20 ரூபாய் பத்திர
பேப்பரில் நோட்டரி பப்ளிக் முத்திரையிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ü விண்ணப்பம் (இரண்டு நகல்) Application Form (2 Copies)
ü எட்டாம் வகுப்பு தேர்ச்சி சான்று (8th Pass TC)
ü ரேசன் கார்டு
(Ration
Card), ரேசன் கார்டு இல்லாதவர்கள் கிராம நிர்வாக
அலுவலரிடம் (VAO)
சான்று பெற்று இணைக்க
வேண்டும்.
ü சாதி சான்றிதல் (Community Certificate)
ü திட்ட அறிக்கை (Project Report)
ü விலைப்பட்டியல் (Performa Invoice), இயந்திரங்கள் (Machinery) மற்றும் மூலப்பொருள் (Raw Materials) வாங்குவதற்கான ஜி.எஸ்.டி நம்பருடன் (GST Number) கூடிய பில்.
ü நோட்டரி பப்ளிக் படிவம் (Notary Public)
ü வங்கி மேலாளரிடம் முன்னரே உங்கள் தொழில் திட்டம்
பற்றி பேசியிருந்தால் அவரின் அனுமதிக்கான வங்கி முத்திரை விண்ணப்பத்தில் இணைத்தால்
தேர்வு குழு நீங்கள் விரும்பும் வங்கியிடமே கடன் பெற பரிந்துரை செய்யும்.
மேற்கண்ட அனைத்து
ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட தொழில் மையத்தில் (DIC)
சமர்ப்பிக்கவும்.
திட்ட அறிக்கை (PROJECT REPORT) என்றால் என்ன?
வங்கிகளில் கடன் பெற திட்ட அறிக்கை (PROJECT REPORT) என்பது மிகவும் அவசியமான
ஒன்று. ஒரு தொழிலை எப்படி
செய்வது? அந்த தொழில்
லாபகரமான தொழிலா? அந்த தொழிலின்
சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில்
துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா
அல்லது வாடகை இடமா? வாடகை இடம்
என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு, பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என
அனைத்து விபரங்களும் திட்ட அறிக்கையில் இடம்பெற வேண்டும்.
மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன்
கட்டுவீர்கள்? எத்தனை தவணையில்
கட்டுவீர்கள்? எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.
பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement, பின் பண செலவு
செய்யும் முறை Cash
Flow Statement, நிறுவனத்தின்
நிதிநிலை அறிக்கை Balance
Sheet இவை அனைத்தும் திட்ட
அறிக்கையில் இருக்க வேண்டும்.
திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும்
புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.
கடன் பெற சொத்து பிணையம் (Collateral Security) தேவையா..??
இத்திட்டத்தில் கடன் பெற எந்தவித சொத்து பிணயமும்
தேவையில்லை. மேலும் கடன் பெற வங்கியின் முன் அனுமதி தேவையில்லை, தேர்வு குழுவினரே வங்கியை தேர்வு செய்து உங்கள்
விண்ணப்பங்களை அனுப்புவார்கள். சேவை மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு சொத்துப்
பிணையம் கிடையாது வியாபாரத்திற்கு சொத்துப் பிணையம் கேட்கலாம்.
வட்டி விகிதம் மற்றும் திரும்ப செலுத்தும் கால
அளவு (Interest Rate):
இத்திட்டத்தில் 12% சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பெரும் கடன் தொகையினை ஐந்து ஆண்டுகள் வரை வட்டியுடன் தவணை தொகையும்
சேர்த்து செலுத்த வேண்டும்.
உங்களுடைய மானிய தொகை வங்கியில் வரவு வைக்கப்பட்டு கடன் தவணை முடியும்
தருவாயில் உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டு கணக்கை நேர் செய்வார்கள்.
எந்த மாதிரியான தொழில்களுக்கு கடன் பெற
முடியும்??
வியாபாரம்: துணி கடைகள், மளிகை வியாபாரம், சில்லறை விற்பனை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை..
சேவை தொழில்: கணினி பழுது பார்த்தல், வாகனங்கள் சரி செய்யும் தொழில், சலூன் கடை, பியுட்டி பார்லர் போன்றவை..
உற்பத்தி தொழில்: ஊதுபத்தி உற்பத்தி, சிப்ஸ் தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல், லேத் பட்டறை, கிரில் வெல்டிங் ஒர்க்ஸ் போன்றவை.
மேலும் இத்திட்டம் பற்றிய விபரங்களுக்கும் மற்றும் தொழில் திட்ட
அறிக்கைகளுக்கும், விண்ணப்பிக்கவும் எங்களை அணுகலாம்..!!
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886
No comments:
Post a Comment