சொத்து பிணையம் மற்றும் தனிநபர் உத்திரவாதம் இல்லாமல் 2 கோடி வரை வங்கி கடன் பெறும் திட்டம்
கடன் உத்திரவாத நம்பிக்கை நிதி குறு மற்றும் சிறு தொழில்கள் திட்டம் CGTMSE Scheme. கடன் உத்திரவாத நம்பிக்கை நிதி திட்டம் மற்றும் மத்திய அரசின் சிட்பியும் இணைந்து
செயல்படுத்தும் திட்டம்.
குறு, சிறு தொழில் துவங்கும் தொழில் முனைவோர்
வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து தான் கடன் பெற வேண்டும். வங்கிகள் சொத்து
பிணையம் அல்லது தனி நபர் உத்திரவாதம் இல்லாமல் கடன் வழங்காது.
அனைத்து தகுதிகளும் கொண்டு சிறப்பான தொழில் செய்ய விரும்பும்
தொழில்முனைவோர் தொழில் கடன் பெற தன்னிடம் சொத்து பிணையம் அல்லது தனி நபர்
உத்திரவாதம் அளிக்க முடியாத நிலை ஏற்படும் போது, அந்த தொழில் சிறப்பானதாக இருந்தால் மேலும் அது உற்பத்தி மற்றும் சேவை
தொழிலாக இருந்தால் அதற்கான கடன் உத்திரவாதம் அளிக்க ஒரு நிறுவனத்தை CGTMSE என்ற பெயரில் மத்திய அரசு சிட்பியுடன் (SIDBI) சேர்ந்து துவங்கியுள்ளது.
குறு,
சிறு தொழில்கள் தொடங்கும் தொழில்முனைவோருக்கு குறிப்பாக புதிய தொழில் துவங்கும்
தொழில்முனைவோர் தங்களிடம் சிறப்பான தொழில் திட்டமாக இருந்தால் வங்கிகளில் ரூபாய் இரண்டு கோடி வரை
எந்த விதமான சொத்து பிணயமும் (Collateral Security) இல்லாமல்
வங்கி கடன் வழங்கும் திட்டம்.
இத்திட்டத்தினை
மத்திய அரசும், சிட்பியும் இணைந்து செயல்படுத்துகிறது. நீங்கள் புதிய தொழில்முனைவோரகவும் லாபகரமான தொழில் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்திட்டம் புதிய
கண்டுபிடிப்பாக இருந்தாலும் வங்கிகள் அந்த திட்டத்திற்கு எந்தவித சொத்து பிணயமும்,
தனிநபர் ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கும். இந்த கடன் காலகடன்
(Term Loan) மற்றும் நடைமுறை மூலதன கடன் (Working Capital Loan) இரண்டுமாகவும் இருக்கலாம்.
இத்திட்டத்தில்
தாங்கள் இணைய CGTMSE-யுடன்
இணைய வேண்டும். முதலாண்டு வங்கி கடன் தொகையில் 1.5% கட்டணமாகவும்
அடுத்த ஒவ்வொரு ஆண்டும் கட்டணமாகவும் கட்ட வேண்டும்.
ஒருவேளே
தொழில் நலிவுறும் பட்சத்தில் CGTMSE வங்கிக்கு கீழ்க்கண்ட வகையில் பணத்தை திருப்பி செலுத்தும்.
ü 5 லட்சம்
வரை – 85%
ü 5 முதல் 50 லட்சம்
வரை - 80%
ü 50 லட்சம்
முதல் 1 கோடி வரை – 50%
என்ற
முறையில் வங்கிகளுக்கு திரும்ப கொடுக்கும்.
இத்திட்டத்தில்
ஒரு சில வங்கிகள் தவிர அனைத்து வங்கிகளும் சேரும்.
லாபம்
தரக்கூடிய தெளிவான திட்டங்கள், புது விதமான தொழில்களுக்கும் மற்றும் புதிய தொழில்
முனைவோரும் இத்திட்டத்தில் கடன் பெற
வாய்ப்பு உள்ளது.
இதில் வங்கியின்
மேலாளர் முடிவே இறுதியானது.
மேலும்
விபரங்களுக்கு கீழே உள்ள இணைய முகவரி மூலம் அணுகவும்..
www.cgtmse.in Toll Free no. :
1800222659
அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சில குறிப்பிட்ட தனியார் வங்கிகளும்
தாங்கள் கொடுக்கும் காலக் கடன் மற்றும் நடைமுறை மூலதனக் கடனை எந்த வித தனிநபர்
உத்திரவாதம் மற்றும் சொத்து பிணையம் இல்லாமல் வழங்க இந்த நிறுவனத்தை அணுகலாம்.
இதுவே CGTMSE திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் பல
தொழில்முனைவோர் தொழில் துவங்க முடியும்.
இந்த வகையில் புதியதாக தொழில் துவங்க எல்லா தகுதியும் உடைய புதிய
தொழில் முனைவோர்கள் சொத்து பிணையம் இல்லாமல் கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்
கொண்டு வரப்பட்ட திட்டம். இதில் புதிய மற்றும் தொழில் நடத்துபவர்களும் கடன்
பெறலாம். ரிசர்வ் வங்கி MSME-2006 சட்டப்படி புதியதாக தொழில்
துவங்கும் அனைத்து தொழில் முனைவோர்களும் ரூபாய் 10 லட்சம் வரை கடன் பெறும் போது
வங்கிகள் எவ்விதமான சொத்து பிணையமும் கேட்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர். முன்பு
இதை CGTMSE செயல்படுத்தி வந்தது.
தற்போது எந்த ஒரு
தொழிலும் 10 லட்சம் வரை குறுந்தொழிலாக கடன் பெற்றால் அது இப்போது முத்ரா (MUDRA
GUARANTEE) உத்திரவாத திட்டத்தின் கீழ் வரும். இந்த
திட்டத்தை தேசிய கடன் உத்திரவாத கம்பெனியில் NCGTC LTD என்ற நிறுவனம் கொடுக்கும். NCGTC LTD இதனைப் பற்றி பிறகு பார்க்கலாம். எனவே ரூபாய் 10 லட்சம் முதல் 200
லட்சம் வரை உள்ள தொழில்களுக்கு CGTMSE திட்டம்
செயல்படும்.
10 லட்சம் முதல் 2 கோடி வரை தொழில் முனைவோர் கடன் கேட்கும்
பட்சத்தில் அவர்களின் தொழில் அடிப்படையில் சிறப்பான தொழில்களுக்கு வங்கிகள்
பிணையம் இல்லாமல் கடன் கொடுக்கலாம். அந்த தொழில்முனைவோருக்கு CGTMSE-யை உத்திரவாதம் கொடுக்க சொல்லலாம்.
இதன் முக்கிய அம்சங்கள்:
- குறு மற்றும் சிறு தொழில்கள் (MSME-2006) சட்டப்படி பதிவு பெற தகுதியான தொழில்கள்.
- சொத்து பிணையம் மற்றும் தனி நபர் உத்திரவாதம் இல்லாமல் ஒரு கடன் பெறலாம்.
- உற்பத்தி மற்றும் சேவை என இரு பிரிவிலும் கடன் பெறலாம்.
- வியாபாரம், கல்வி, பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயவிதவி குழுக்கள் இதில் அடங்காது.
- நிதி மற்றும் நிதி அல்லாத கடன்களுக்கும் இது பொருந்தும்.
- நீங்கள் கடனை திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில் உங்கள் கடனில் 85% வரை இந்த திட்டம் மூலம் வங்கிகளுக்கு பணம் வழங்கப்படும். இது அனைத்து அரசு வங்கிகளிலும் ஒரு சில தனியார் வங்கிகளிலும் செயல்பட்டு வருகிறது.
- இவை காலக் கடன் (Term Loan) மற்றும் நடைமுறை மூலதனம் (Working Capital) இரண்டிற்கும் பொருந்தும்.
- வங்கிகளுக்கு இதில் பதிவு செய்யவும் மற்றும் இதில் இருந்து திரும்ப பணம் பெறவும் ஆன்லைனில் எளிதாக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தகுதியான நிறுவனங்கள்:
- எல்லா அரசு வங்கிகள் – All Government Banks
- சிட்பி - SIDBI
- என்.எஸ்.ஐ.சி - NSIC
- குறிப்பிட்ட செடுயுள் வங்கிகள் – Schedule Banks
வங்கிகள் புதிய மற்றும் நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களுக்கே
இத்திட்டம் மூலம் கடன் கொடுப்பார்கள்.
இத்திட்டம் 2 கோடி வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுக்க
உத்திரவாதம் அளிக்கின்றன.
சிறிய அளவிலான கார், லாரி மற்றும் படகு தொழில்களும் கடன்
பெற இதில் தகுதி உள்ளது.
காலக் கடன் மற்றும் நடைமுறை மூலதனம் இதில் எந்த ஒரு கடனும்
இத்திட்டத்தில் கொண்டு வரலாம் மற்றும் இரண்டிற்கும் சேர்த்து கடன் பெறலாம்.
உங்கள் கடனில் வாங்கப்படும் நிலம், கட்டிடம், எந்திரங்கள் மற்றும் நடைமுறை மூலதனம்
இவை அனைத்தும் வங்கிகள் பிரைம் சொத்துகளாக எடுத்துக் கொள்வார்கள். இந்த
சொத்துக்கள் வங்கிகள் பிணையமாக எடுத்துக் கொள்வார்கள்.
மூன்றாம் நபர் சொத்துகள் உத்திரவாதம் எதுவும் வங்கிகள் பெற கூடாது.
அப்படி பெற்றால் இந்த திட்டத்தில் இருந்து விலகி விட நேரிடும்.
இந்த திட்டத்தின் மூலன் கடனளிக்க வங்கிகள் முதலில் முன்வர வேண்டும்.
இந்த திட்டத்தில் உங்கள் கடன் விபரம் அனைத்தையும் CGTMSE இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு உங்கள்
நிறுவனம் தொழில்முனைவோர் நஷ்டம் ஏற்பட்டு தொழில் மூடும் நிலையில் அவர்களின் அன்றைய
தேதியில் உள்ள கடனில் CGTMSE ஒரு பகுதியை வங்கிகளுக்கு அளிக்கும்.
அதன் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணம்:
பெண்கள் குறுந்தொழில்களுக்கு 5 லட்சம் வரை இருந்தால் ஆண்டு கட்டணமாக
0.75% (கடன் அளவில்) கட்ட வேண்டும். மற்றவர்கள் 1% வரை கட்ட வேண்டும்.
5 லட்சம் முதல் 2 கோடி வரை பெண் தொழில்முனைவோர்களுக்கு வரை 0.85%
ஆண்டு கட்டணமாக கட்ட வேண்டும். மற்றவர்கள் 1% வரை கட்ட வேண்டும்.
இக்கட்டணங்களை வங்கிகள் உங்கள் கணக்கில் இருந்து கட்டி விடுவார்கள்.
அப்படி கட்டி உள்ளார்களா என அறிந்து கொள்வது அவசியம்.
நடைமுறை மூலதன கடன் 5 ஆண்டுகள் வரை உத்திரவாதம் பெறலாம்.
தேவைப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பின்பும் உத்திரவாத கட்டணம் கட்டி பதிவு செய்து
கொள்ளலாம்.
இத்திட்டம் தகுதியான லாபகரமான தொழில் முனைவோருக்கே வழங்கப்படும்.
சிட்பி (SIDBI), என்.எஸ்.ஐ.சி (NSIC) போன்ற நிதி நிறுவனங்களின் மூலம் பெரும் கடன்களுக்கு இதில் முன்னுரிமை
வழங்கப்படும்.
மேல்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள விகிதாசார அடிப்படையில்
வங்கிகளுக்கு இந்த விகிதாசாரத்தில் திரும்ப கிடைக்கும். இவை எப்போது தொழில்
முடங்கியதோ அப்போது அந்த தொழில் நிறுவனம் கட்டவேண்டிய கடன் பாக்கியில்
கொடுக்கபடும் நிதி. இது இப்போது மாற்றப் பட்டுள்ளது. ரூபாய் 50 லட்சம் முதல் 200
லட்சம் வரை உள்ள தொழில்களுக்கு ரூபாய் 75% திரும்ப கிடைக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் உங்கள் திட்ட அறிக்கை மற்றும் உங்கள் செயல்பாடுகள்
பார்த்த பின்பே வங்கி மேலாளர் அவர்களால் பரிந்துரை செயப்படும். வங்கி மேலார்
அவரகளின் முடிவே இறுதியானது .
இந்த திட்டத்தினை பற்றிய விரிவான விபரங்கள் மற்றும் இதில் தகுதி
பெற்றுள்ள வங்கிகள் பற்றிய விபரங்களை அறிய www.cgtmse.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
இத்திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் தொழில் சார்ந்த திட்ட
அறிக்கைகள் பெற எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் நேரிலும் முன் அனுமதி பெற்று
எங்களிடம் ஆலோசனைகள் பெறலாம் (ஆலோசனை கட்டணம் பெறப்படும்).
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross,
Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886
Facebook: https://www.facebook.com/msmesupport
No comments:
Post a Comment