TAMIL NADU BACKWARD
CLASSES ECONOMIC DEVELOPMENT CORPORATION LIMITED (TABCEDCO)
படித்த BC மற்றும் MBC தொழில்முனைவோர் சுயதொழில் தொடங்க
குறைந்த வட்டியில் பத்து லட்சம் வரை கடன் வழங்கும் தமிழக அரசின் திட்டம்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்
மேம்பட்டு கழகம் வழங்கும் பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மருத்துவம், பொறியியல், சட்டம், பட்டயக்கணக்கு
போன்றவற்றில் பட்டம் பெற்றவர்கள் சுயதொழில் தொடங்க பத்து லட்சம் ரூபாய் வரை குறைந்த
வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
வட்டி விகிதம்: ரூ.5 லட்சம் வரை 6%, ரூ.5 இலட்சத்திற்கு மேல் 8%
இத்தொகையினை 10 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
தகுதிகள்:
ü
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
ü
குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.3,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
ü
வயது 18 முதல் 60 வரை இருக்க வேண்டும்.
ü
ஒரு
குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
கடன் வழங்கும் நிறுவனம்:
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்
சங்கங்கள்.
பொது கடன் திட்டம்:
மளிகை கடை, மருந்தகம், மிதிவண்டி நிலையம், கணினியகம், தொலைப்பேசி நிலையம், நூலகம், புத்தகக் கடை, சிற்றுண்டியகம்
போன்ற பல்வேறு தொழில்கள் தொடங்க அதிக பட்சம் ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
வட்டி விகிதம் 6%. இத்தொகை ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த
வேண்டும்.
பிற கடன் திட்டங்கள்:
மேலும் தனி நபருக்கு அதிக பட்சமாக ரூ.10 லட்சமும், மகளிருக்கான புதிய பொற்கால கடன்
திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சமும், ( வட்டி சதவிகிதம் ஆகும்)
கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரமும், கடன் உதவி வழங்கப்படும். மேலும் சுயஉதவி குழுவிற்கு ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் என
அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கபடுகிறது.
போக்குவரத்து வாகனங்கள் வாங்க கடன்:
ரூ.3 லட்சத்து 13 ஆயிரமும் வரை பெறலாம்
வட்டி சதவிகிதம் ஆகும்
.
விவசாயிகளுக்கு கடன்:
சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன்
கூடிய புதிய ஆழ்துளை கிணறு, மின் மோட்டார், பம்புகள் மற்றும் இதர உபகரணங்கள்
பொருத்துதல், குழாய் தொடரமைப்பு அமைத்தல், சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றிற்கு ரூ.1
லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் கடன் தொகையில் 50% வரை அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் வரை
மானியம் பின் நிகழ்வாக வழங்கப்படும்.
கல்விக்கடன்:
கல்விக்கடன் 1% வட்டியில் வழங்கப்படும்
இணைக்கபட வேண்டிய ஆவணங்கள்:
ü சாதி சான்றிதல்
ü வருமான சான்றிதல்
ü இருப்பிட சான்றிதல்
ü ரேசன் கார்டு நகல்
ü பெரிய திட்டங்களுக்கு திட்ட அறிக்கை
ü போக்குவரத்து வாகன கடனாக இருந்தால் ஓட்டுநர் உரிமம்
ü மற்றும் வங்கிகள் கோரும் பிற ஆவணங்கள் இணைக்கப்பட
வேண்டும்.
கடன் வழங்கும் முறை:
மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் கடன் உதவி பெற கோரும் விண்ணப்பங்கள் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நல அலுவலரிடம் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களானது
அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேற்படி விண்ணப்பங்கள் தேர்வு குழுவால் ஆய்வு
செய்யப்பட்டு கடன் பெறுவோர் தேர்வு செய்யபடுவார்கள்.
விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் சென்னை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்
பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பி தகுந்த ஆணைகள்
பிறப்பிக்கப்பட்டு, வங்கி மூலமாக கடன் உதவி வழங்கப்படும். வங்கிகளின் விதிமுறைகளுக்கு
உட்பட்டு கடன் வழங்கப்படும்.
திட்ட அறிக்கை என்றால்
என்ன..??
திட்ட அறிக்கை
என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த
தொழில் லாபகரமான தொழிலா? அந்த
தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த
தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த
எந்திரங்களின் விலை என்ன? தொழில்
எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த
இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால்
வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை
விபரம், மூலப்பொருட்கள்
விபரம், பணியாட்கள்
விபரம், மின்சார
தேவை, மாத
மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப
பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை
செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.
மேலும் இந்த
செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில்
இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு
வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.
பெரிய கடனுக்கு
சமநிலை உற்பத்தி திறன் Break Even
Point, உற்பத்தி
செலவு 5 வருட
அட்டவணை Profitability
Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின்
நிதிநிலை அறிக்கை Balance
Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில்
இருக்க வேண்டும்.
திட்ட அறிக்கை
தெளிவாகவும், சரியாகவும்
புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.
மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:
ü மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
ü கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர்
அலுவலகம்.
தொழில் திட்ட அறிக்கைகள் தேவைப்பட்டால் எங்களை அணுகலாம்.
Sastha
Startup Solutions
No.9,
Second Floor, Surya Complex
9th
Cross, Thillainagar, Trichy-18
Mobile:
+91 9789737886
No comments:
Post a Comment