பால் பண்ணை
தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்
(Dairy Entrepreneurship Development
Scheme – DEDS)
உலகின் பால் உற்பத்தி 18% பால் உற்பத்தி
இந்தியாவில் செய்யபடுகின்றது. இந்தியாவில் கால்நடைகள் அதிகம். உலகின் தனி நபர்
பால் உற்பத்தியை விட இந்தியாவின் பால் உற்பத்தி அதிகம். பால் ஓர் அமுத சுரபி, பாலில் இருந்து தான்
வெண்ணெய், தயிர், நெய், பால் ஆடை மற்றும்
பால் பவுடர் போன்ற பல பொருட்கள் தயாராகின்றன.
இந்தியாவில் பால் உற்பத்தியை மேலும்
அதிகரிக்க 2020 ஆம் ஆண்டில்
இருமடங்காக உற்பத்தி செய்ய 2010-ம் ஆண்டு கொண்டு
வரப்பட்ட திட்டம் தான் பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம். இதில் சிறு
விவசாயிகள், தொழில்முனைவோர், சுயவுதவி குழுக்கள்
மற்றும் விவசாய சங்கங்கள் என அனைவருக்கும் மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம்.
பசு நமக்கு பால் மட்டும் தருவதில்லை. அதன்
சாணம் சிறந்த உரமாகும் மேலும் இதிலிருந்து மண்புழு உரம் தயாரித்து விவசாயத்திற்கு
பயன்படுத்தலாம்.
இத்திட்டம் பற்றிய
விபரம்:
ü இது மாட்டு பண்ணை
வைக்க கடன் வழங்கும் NABARD
நபார்டு
வங்கியின் திட்டம்.
ü இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை
வளர்க்க ரூபாய் 7 லட்சம் வரை கடன்
பெறலாம்.
ü இந்த திட்டத்தில் 20 கன்றுகள் வரை வாங்க
ரூபாய் 9.70 லட்சம் வரை கடன்
பெறலாம்.
இத்திட்டத்தில்
யாரெல்லாம் கடன் பெற முடியும்..?
விவசாயிகள், தனிநபர் தொழில்முனைவோர், சுயவுதவி குழுக்கள்,
கூட்டுறவு
சங்கங்கள்.
இதில் குழுக்களானால் ஒவ்வொரு குழு
உறுப்பினரும் 2 முதல் 10 மாடுகள் வரை
வளர்க்க கடன் பெறலாம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும்
மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம். ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல்
தள்ளி இருக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் பயன் பெறலாம்.
நபார்டு வழங்கும் பால்
பண்ணை சார்ந்த பிற கடன் திட்டங்கள்:
திட்டம் 1: சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க (2 முதல் 10 மாடுகள் வரை) 25% மானியத்துடன்
ரூபாய் 7 லட்சம் வரை கடன்
பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம்
பெறலாம். இந்த மானியம் கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும்.
திட்டம் 2: கன்று குட்டிகள் வாங்கி வளர்க்கும் திட்டம். இதில் 20 கன்று குட்டிகள்
வரை வாங்கலாம். இதற்கு Rs.9.70 லட்சம் வரை கடன்
பெறலாம். இதற்கும் 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.
திட்டம் 3: மண்புழு உரம் தயாரிக்க கடன் திட்டம். இத்திட்டத்தில் ரூ.25,200 வரை கடன் பெறலாம்.
இதற்கும் 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.
திட்டம் 4: பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரம்
முதலியன வாங்க கடன் திட்டம். இத்திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.
திட்டம் 5: பால் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும்
உபகரணங்கள் வாங்க ரூ.13.20லட்சம் வரை கடன்
பெறலாம். இதற்கு 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோர் 33.33%மானியம் பெறலாம்.
திட்டம் 6: பால் குளிரூட்டி (Cold
Chain Facility) அதனை எடுத்து எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ.26.50 லட்சம் வரை கடன்
பெறலாம். இதற்கு 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோர்33.33% மானியம் பெறலாம்.
திட்டம் 7: பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு (Cold Storage) அமைக்க ரூ.33 லட்சம் வரை கடன்
பெறலாம். இதற்கு 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.
திட்டம் 8: தனியார் கால்நடை மருத்துவமனை (Private Veterinary Clinic) அமைக்க கடன்
பெறலாம்.
ü நடமாடும் கிளினிக்
ரூ.2.60 லட்சம்
ü நிலையான கிளினிக்
ரூ.2 லட்சம்
இதற்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.
திட்டம் 9: பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்ய
ரூ.3லட்சம் வரை கடன்
பெறலாம். இதற்கு 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோர் 33.33%மானியம் பெறலாம்.
பயனாளியின் பங்கு:
ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெற பயனாளியின் பங்கு தொகை தேவையில்லை.
அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10% பயனாளியின் பங்காக
கொண்டு வர வேண்டும்.
வங்கியில் கடன் ரிசர்வ் வங்கியின்
நடைமுறைப்படி கொடுக்கப்படும்.
கடன் வழங்கும்
வங்கிகள்:
ü வணிக வங்கிகள்
ü கிராம மற்றும்
நகர்ப்புற வங்கிகள்
ü மாநில கூட்டுறவு
வங்கிகள் & மாநில வேளாண்
கூட்டுறவு வங்கிகள்
ü நபார்டு வங்கியில்
மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்
ü நபார்டு வங்கியில்
கடன் பெறும் திட்டங்களுக்கே இது பொருந்தும்.
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியான விண்ணப்பங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கும்.
தொழில்முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை
வங்கியில் சமர்பிக்க வேண்டும். வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாகும்
பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி
மானியத்தினைப் பெற்று கொள்ளலாம். இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள நபார்டு கிளை
அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நபார்டு வங்கி வங்கிகளில் இருந்து
பெறப்படும் மானியதிற்கான விண்ணப்பங்களை பெற்ற பின் ஒரு கமிட்டி அமைத்து
விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒரு
மாதத்திற்குள் உத்தரவை பிறப்பிப்பார்கள்.
ரீஜனல் அலுவலகம் தாங்கள் பெறும் தகுதியான
விண்ணப்பங்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி எவ்வளவு தொகை உள்ளதோ அதன்படி
கொடுப்பார்கள். முதலில் விண்ணப்பிக்கும் நபருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின்
பரிந்துரையின் படி வட்டி விதிக்கப்படும். திரும்ப செலுத்தும் முறை 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை
செலுத்தலாம். இந்த கடனுக்கான சொத்து பிணையம் ரிசர்வ் வங்கியின் பரிந்துரை படி
வங்கியால் கேட்கப்படும்.
நபார்டு வங்கியில் விண்ணப்பங்களை தேர்வு
செய்ய குழு (PSC) மற்றும் துணை
கண்காணிப்பு குழு (JMC)
அமைத்து
அவர்களும் கண்காணிப்பார்கள். மேலும் மாநில வங்கிகளின் குழுவும் (SLBC)கண்காணிப்பார்கள்.
திட்ட அறிக்கை
என்றால் என்ன?
திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி
செய்வது? அந்த தொழில் லாபகரமான
தொழிலா? அந்த தொழிலின் சந்தை
வாய்ப்பு எப்படி உள்ளது?
அந்த
தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின்
விலை என்ன? தொழில் எங்கு
ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது
வாடகை இடமா?வாடகை இடம் என்றால்
வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம்,
மூலப்பொருட்கள்
விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள
விபரம், உப பொருட்கள்
மற்றும் பாக்கிங் செலவு,
விற்பனை
செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.
மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும்
லாபம், லாபத்தில் இருந்து
எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற
விபரங்களும் அடங்கும்.
பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் (Break Even Point), உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை (Profitability Statement) பின் பண செலவு
செய்யும் முறை, நிறுவனத்தின்
நிதிநிலை அறிக்கை (Balance
Sheet) இவை
அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.
திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும்
படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.
மேலும் இத்திட்டம்
பற்றிய விபரங்கள் மற்றும் வங்கிகளுக்கான திட்ட அறிக்கைகள், ஆலோசனைகள் பெற எங்களை அணுகலாம்...
Sastha
Startup Solutions
No.9,
Second Floor, Surya Complex
9th
Cross, Thillainagar, Trichy-18
Mobile:
+91 9789737886
No comments:
Post a Comment