Complete Guidance for Business Startup

Friday, 13 March 2020

PMEGP 2nd LOAN - பிரதம மந்திரியின் தொழில் விரிவாக்க கடன் திட்டம்


PMEGP மற்றும் MUDRA ஆகிய திட்டங்களில் கடன் பெற்று லாபகரமாக தொழில் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு 15% மானியத்துடன் கூடிய தொழில் விரிவாக்க கடன் திட்டம். 


பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் கடன் பெற்று லாபகரமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய தொழில் விரிவாக்க கடன் வழங்கும் திட்டம்.  பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் கடன் பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்தி கடனை உரிய நேரத்தில் வட்டியுடன் எல்லா தவணைகளையும் சரியாக கட்டியவர்கள் இதில் விண்ணபிக்கலாம். தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கும், நவீன இயந்திரங்கள் வாங்கவும், மூலப் பொருட்களை அதிகரித்து வாங்கவும் இதில் கடன் பெறலாம்.

உற்பத்தித் துறைக்கு 1 கோடி வரை கடன் பெறலாம்
சேவைத் துறைக்கு 25 லட்சம் வரை கடன் பெறலாம்

இந்த திட்டத்தில் 15 சதவிகிதம் மானியம் பெறலாம். அதிகபட்சமாக 15 லட்சம் வரை மானியமாக பெறலாம்.

இந்த திட்டம் கதர் கிராமிய தொழில் வாரியத்தின் கீழ் செயல்படுத்தப் படுகிறது. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் இத்திட்டத்தில் இதுவரை 4,66,471 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் KVIC, KVIB  மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின் (DIC) மூலம் நிறைவேற்றப்படும்.

இந்தக் கடன் திட்டத்திற்கு தகுதி பெறும் நிறுவனங்கள்:
  • நன்றாக வெற்றிகரமாக இலாபத்துடன் ஓடும் நிறுவனங்கள் தங்களது விரிவாக்கம் மற்றும் மேம்பாடு உற்பத்தி அதிகரிப்பதற்கும் கடன் பெறலாம்.
  • தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பம் மற்றும் தானியங்கு தொழில்நுட்பம் மூலம் தொழில் அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம்
  • உற்பத்தியை அதிகப்படுத்துதல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான தேவைக்கு உதவுதல் ஆகியவற்றிற்கும் கடன் பெறலாம்

நிதி விவரங்கள்:
தொழில்முனைவோர் மூலதனம் – 10% சதவிகிதம்
அரசு மானியம்                 - 15% சதவிகிதம்
மற்றவை வங்கி கடன்          - 75% சதவிகிதம்

உற்பத்தித் துறை (MANUFACTURING UNIT) - ஒரு கோடி ரூபாய் வரை
சேவைத் துறை (SERVICE SECTOR)                -  25 லட்சம் வரை

திட்டத்தின் பெரும் கடன் மதிப்பு
கட்டிடம் கட்டுவதற்கும், எந்திரங்கள் வாங்கவும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். ஆனால் அதில் கட்டிட கட்டுமானங்கள் திட்ட மதிப்பில் 25% சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. திட்ட மதிப்பில் மொத்த கேப்பிட்டல் செலவு கட்டிடம் உட்பட திட்ட மதிப்பில் 60% சதவிகிதம் வரை இருக்கலாம்.

மேலும் நடைமுறை மூலதனம் 40% சதவிகிதம் வரை இருக்கலாம். வங்கிகள் தேவைப்பட்டால் இந்தக் கடன் சதவிகிதங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

யாரெல்லாம் இதில் விண்ணப்பிக்க்லாம்??  
  • இதில் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் பி.எம்.இ.ஜி.பி (PMEGP)  முத்ரா (MUDRA) ஆகிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடன் பெற்றிருக்க வேண்டும். மேலும் வட்டியுடன் தவணை தவறாமல் கடனை கட்டி முடித்திருக்க வேண்டும்.
  • எந்த வங்கியில் முதல் முறையாக கடன் பெற்றுள்ளோமோ அந்த வங்கியிலேயே கடன் பெறலாம், அல்லது வேறு வங்கியிலும் கடன் பெறலாம்.
  • இந்த தொழில் நிறுவனம் நடப்பாண்டுக்கு முந்திய மூன்று வருடங்களில் நல்ல லாபத்தில் இயங்கி இருக்க வேண்டும்.
  • இந்தத் தொழில் உத்யோக் ஆதார் பதிவு பெற்று இருத்தல் அவசியம்
  •   விரிவாக்கக் கடன் பெறும்போது கடனுக்கு தகுந்தாற்போல வேலையாட்களை அதிகப்படுத்துதல் அவசியம்.
  • இந்தத் திட்டம் பி.எம்.இ.ஜி.பி (PMEGP)   திட்டம் போலவே மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்த படுகிறது.

எந்தெந்த வங்கிகளில் கடன் பெறலாம்:
  • எல்லா பொதுத்துறை வங்கிகள் (All Public Sector Banks)
  • எல்லாக் கிராமப்புற வங்கிகள் (All Regional Rural Banks)
  • டாஸ்க் போர்ஸ் கமிட்டி ஒப்புதல் பெற்ற கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகள் இக்கடனைப் பெறலாம். (Cooperative Banks)
  •  சிட்பி (SIDBI – Small Industries Development Bank of India)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை பி.எம்..ஜி.பி இணையதளம் (PMEGP Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும்:
  •   PMEGP/MUDRA முந்தைய கடன் விபரங்கள், கடன் கட்டி முடித்ததற்கான வங்கியின் சான்று.  
  • விரிவாக்கத்திற்கான தொழில் திட்ட அறிக்கை
  •  விண்ணப்பதாரரின் போட்டோ
  • 3 ஆண்டுகள் வருமான வரி செலுத்திய படிவம். (IT RETURNS)
  • மூன்று வருட சார்ட்டட் அக்கவுன்டன்ட் கணக்குப் பரிந்துரை இவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். (Auditor Balance Sheet)

மாநில டாஸ்க் போர்ஸ் கமிட்டி விண்ணப்பங்களைப் ஆராய்ந்து அனைத்தும் சரியாக உள்ள பட்சத்தில் இத்திட்டத்தை ஒப்புதல் அளித்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவார்கள்.

இத்திட்டத்தில் வங்கிகள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் முதல் தவணையை கொடுக்க வேண்டும். அதன்பின் மானியத் தொகையை வங்கிகள் பெற்று  18 மாதம் வங்கியில் டெபாசிட்டாக வைக்கப்படும் அதற்கு வட்டி கிடையாது. 

இதில் கடன் பெற சொத்து பிணையம் தேவையா?
இந்த கடன் சி.ஜி.டி.எம்.எஸ்.சி (CGTMSE) என்ற இத்திட்டத்தின் மூலம் எந்தவித சொத்துப் பிணையம் இல்லாமலே வங்கிகள் கடன் கொடுக்கலாம். எனவே சொத்துப் பிணையம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் பெறலாம்.

இக்கடனை வங்கிகளும், மானியம் வழங்கும் ஏஜென்சிகளும் சேர்ந்து மேற்பார்வை இடுவார்கள் அதுமட்டுமின்றி மூன்றாம் தர ஒருவரை நியமித்து மேற்பார்வையிட செய்வார்கள்.

திட்ட அறிக்கை என்றால் என்ன?
திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு, பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement, பின் பண செலவு செய்யும் முறை Cash Flow, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.

மேற்கண்ட கடன் திட்டம் பற்றிய ஆலோசனைகள், வங்கிகளுக்கான திட்ட அறிக்கைகள்  தயாரித்தல் மற்றும் ஆன்லைனில் விண்ணபிக்க எங்களை அணுகலாம்.

தொடர்புக்கு:
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886

No comments:

Post a Comment