Complete Guidance for Business Startup

Saturday, 22 February 2020

தாட்கோ SC/ST தொழில்முனைவோருக்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம்


தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக தாட்கோ எனும் தமிழக அரசு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் SC/ST பிரிவினருக்கு பல நல திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் சுயதொழில் துவங்குவதற்கான கடன் திட்டம் மற்றும் தொழில்முனைவோருக்கான கடன் திட்டம் என இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.




இதில் தொழில்முனைவோருக்கான கடன் திட்டத்தை எப்படி பெறுவது? எந்த எந்த தொழிலுக்கு கடன் பெற முடியும்? கடன் பெற எப்படி விண்ணப்பது? போன்ற பல கேள்விகளுக்கு இங்கு உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.

இத்திட்டத்தில் பயனடைய தேவையான தகுதிகள்..??
Ø இத்திட்டத்தில் பயன்பெற தாங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் மக்களுக்கான சான்றிதல் (SC/ST) பெற்றிருக்க வேண்டும்.
Ø உங்களுடைய குடும்ப வருமானம் ஒரு லட்சத்திற்கு அதிகமாக இருக்க கூடாது.
Ø வயது 18 முதல் 55 வரை இருக்கலாம்.
Ø ஒரு குடும்பத்திற்கு ஒரு நபருக்கு மட்டும் கடன் பெற முடியும். குடும்ப உறுப்பினர்கள் மானியத்துடன் கூடிய கடன் பெற்றிருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காது.
Ø கடன் பெறும் திட்டத்தை கடன் பெறுபவரே கண்டறிந்து கடன் பெற விண்ணபிக்க வேண்டும்.
Ø கடன் பெறும் சொத்துக்கள் அனைத்தும் கடன் பெறுபவரின் பெயரில் வைக்கப்படும்.

இத்திட்டத்தில் எவ்வளவு கடன்பெற முடியும்?
கடன்பெற உச்ச வரம்பு ரூ.7.5 லட்சம்
இதில் மானியம்(SC) 30% அல்லது 2.25 லட்சம் இதில் எதில் குறைவோ அது வழங்கப்படும்.
மானியம் உங்களுக்கு கடன் பெற்ற பின் உங்கள் வங்கியில் செலுத்தப்படும். மீதம் உள்ள தொகை உங்களுக்கு வங்கிகள் கடனாக அளிக்கும்.
மலைவாழ் மக்களானால்(ST) அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.7.5 லட்சம் கடனாகவும் 50% மானியம் வரை பெறலாம். அதிகபட்சம் 3.25 லட்சம் வரை கடன் பெற முடியும்.

இத்திட்டத்தில் எந்த மாதிரி தொழிலுக்கு கடன்பெற முடியும்?
       விற்பனை, கடை, சேவை மற்றும் உற்பத்தி துறை சார்ந்த தொழில்கள் செய்யலாம். விவசாயம் மற்றும் வாகனங்கள் வாங்கவும் இதில் கடன் பெற முடியும்.

இத்திட்டத்தில் கடன் பெற என்ன செய்ய வேண்டும்?
தாங்கள் இந்த கடன்பெற தாட்கோ-வின் இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
ü  குடும்ப வருமான சான்றிதல் எண் மற்றும் தேதி.
ü  சாதி சான்றிதல் எண் மற்றும் தேதி.
ü  விண்ணப்பதாரரின் புகைப்படம்
ü  ஆதார் எண்
ü  வயது சான்றிதல்
ü  இருப்பிட சான்றிதல்
ü  ட்ரைவிங் லைசன்ஸ் (மோட்டார் வாகன கடன்)
ü  விலைப்பட்டியல் ( GST நம்பருடன் இருக்க வேண்டும்)
ü  கல்வி சான்றிதல் (TC & Mark Sheet)
ü  திட்ட அறிக்கை
 
 இத்திட்டத்தில் கடன்பெற எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணபிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணபிக்க முதலில் அதன் வெப்சைட்டில் சென்று தேவையான விபரங்களை பூர்த்தி செய்தி அப்ளை செய்ய வேண்டும். உங்களுடைய பெயர், ஆண்டு வருமான சான்றிதல் எண் மற்றும் தேதி, சாதி சான்றிதல் எண் மற்றும் வழங்கப்பட்ட தேதி, உங்கள் புகைப்படம், வயது சான்றிதல், எந்திரங்களின் விலைப்பட்டியல் ஜிஎஸ்டி எண்ணுடன் இருக்க வேண்டும், தெளிவான திட்ட அறிக்கை மற்றும் விண்ணப்பிக்கும் வங்கியின் ஐ.எப்.சி நம்பருடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

வாகன கடன் பெற விரும்பினால் மேற்கண்ட விபரங்களுடன் ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ச் லைசன்ஸ் இணைத்து விண்ணபிக்க வேண்டும்.
பின்னர் குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து சான்றிதல்களையும் ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும். பிறகு விண்ணப்பம் பூர்த்தி செய்ததற்கான ஒரு பதிவு அத்தாட்சி வழங்கப்படும். அதனை பிரிண்ட் எடுத்துகொண்டு மேற்கண்ட அனைத்து சான்றிதல்களின் நகல்களுடன் திட்ட அறிக்கையும் சேர்த்து 2 செட் நகல்களுடன் தாட்கோ அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் உங்களுடைய விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கடன் பெற தகுதி சான்றிதல் அளிப்பார்கள். இதனை வங்கிக்கும் பரிந்துரை செய்வார்கள். பின்னர் வங்கி அதிகாரி உங்களுக்கு கடன் வழங்குவார்கள்.
குறிப்பு: இத்திட்டத்தில்  கடன் பெற வங்கி அதிகாரியிடம் முன்னரே உங்கள் திட்ட அறிக்கையினை காண்பித்து அனுமதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது சிறந்தது. இல்லையெனில் வங்கி மேலாளர் உங்கள் விண்ணப்பத்தை சரியில்லை எனக் கூறி நிராகரிக்க வாய்புகள் உள்ளது. வங்கி மேலாளரின் முடிவே இறுதியானது. விண்ணப்பம் நிராகரிக்கும் போது அதற்கான காரணங்களை உங்களுக்கு தருவார்.

சரியாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.

இதில் தங்களின் பங்கு 5% வரையும் 30% (Rs.2.25மிகாமல்) மானியமாகவும் மற்றவை வங்கி கடனாகவும் பெறலாம்.

மலைவாழ் மக்களானால்(ST) அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.7.5 லட்சம் கடனாகவும் 50% மானியம் வரை பெறலாம். அதிகபட்சம் 3.25 லட்சம் வரை மானியம் பெற முடியும்.

விண்ணப்பத்தில் உள்ள திட்டங்களில் உங்கள் திட்டம் வரவில்லை என்றால் other என்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விலாசம் மற்றும் ஆதார் எண் கொடுக்க வேண்டும்.

இதில் வங்கியின் பெயர் குறிப்பிட பட வேண்டும். எந்த வங்கி எந்த கிளை என்ற விபரம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மேற்கண்ட இத்திட்டத்தில் தாங்கள் மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

இத்திட்டத்தில் வாகன கடன்:
    இந்த திட்டத்தில் ட்ரைவிங் லைசன்ஸ் பேட்ச் உள்ள தகுதியான நபர்களுக்கு வாடகை கார், லோடு வேன், டிராக்டர் போன்றவை வாங்க கடன் பெறலாம்.

திட்ட அறிக்கை என்றால் என்ன?
திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா? வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு, பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.

இக்கடன் திட்டத்தில் பயனடைய தேவையான ஆலோசனைகள் வங்கிகளுக்கான திட்ட அறிக்கைகள் பெற எங்களை அணுகலாம்.
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886


No comments:

Post a Comment