Complete Guidance for Business Startup

Wednesday, 12 February 2020

NEEDS SCHEME (புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்)


படித்த  பட்டம், பட்டயம் மற்றும் ஐ.டி.ஐ அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்கும் திட்டம். மொத்த மானியம் ரூ.30 லட்சம் மிகாமல் இருக்கும். ஒவ்வொரு வருடமும் தமிழகம் முழுவதும் 1000 பேர் வரை இத்திட்டத்தில் பயனடைகின்றனர்.



இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 
ü  இத்திட்டமானது தமிழக முன்னால் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட கனவு திட்டமாகும்.
ü  வருடந்தோறும் 1000 முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் துவங்க உதவும் திட்டமாகும்.
ü  இத்திட்டத்தில் 50% பெண் தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ü  இத்திட்டம் லாபகரமான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கான திட்டம். இத்திட்டம் முதல் தலைமுறை புதிய தொழில்முனைவோர்களுக்கான திட்டம்.
ü  இதில் நிலம், கட்டிடம், இயந்திரங்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பில் 25% மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக அரசின் மானியம் ரூ.30 லட்சம் வரை பெறலாம்.

கடன் பெற தகுதியான வயது வரம்பு:
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 21 வயது முடிவடைந்தவராகவும், பொதுப்பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு மிகாதவராகவும், சிறப்பு பிரிவை சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  
சிறப்பு பிரிவு தொழில்முனைவோர் என்பவர் யார்?
மகளிர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பிற்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னால் ராணுவத்தினர் / திருநங்கையர் / மாற்று திறனாளிகள்.

கடன் பெற தேவையான கல்வித் தகுதி:
பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ITI / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி.

வசிப்பிடம்:
விண்ணப்பதாரர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியுள்ள தொழில்கள்:
இலாபகரமாக செயல்படுத்த கூடிய அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் சார்ந்த தொழில்கள் இத்திட்டதில் விண்ணப்பிக்கலாம்.

திட்ட மதிப்பீடு:
ü  திட்ட மதிப்பீடு ரூ.10.00 லட்சத்திற்கு மேல் ரூ.5.00 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ü  தொழில்முனைவோர் நிலம் வாடகை/குத்தகையில் இயங்கி வரும் கட்டிடத்தின் மதிப்பு/தொழில்நுட்ப ஆலோசனைக்கான செலவு, நடைமுறை மூலதனத்திற்கான விளிம்புத் தொகை மற்றும் ஆரம்ப கட்ட செலவினங்கள் இவை அனைத்தையும் தமது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.
ü  நிலத்தின் மதிப்பு கடன் விண்ணப்பம் சமர்பிக்கும் தேதியில் அரசு நிர்ணயம் செய்த மதிப்போ (அ) சந்தை மதிப்போ இதில் எது குறைவாக உள்ளதோ அதை திட்ட மதிப்பில் சேர்த்து கொள்ளலாம்.

தொழில்முனைவோரின் முதலீடு:
பொதுப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10%
சிறப்பு பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5%

அரசு வழங்கும் மானிய உதவி:
திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.30.00 இலட்சம் வரை.

மானிய உதவி பெற தகுதியுடைய முதலீடுகள்:
விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரில் புதிதாக வாங்கப்படும் நிலத்தின் மதிப்பு, புதிதாக கட்டப்படவுள்ள தொழிற்கூடம் மற்றும் புதிதாக வாங்கப்படவுள்ள இயந்திரங்கள் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களின் மதிப்பு.

மானிய உதவி பெற தகுதியில்லாத முதலீடுகள்:
வாடகை/குத்தகையில் இயங்கி வரும் தொழிற்கூட கட்டிடத்தின் மதிப்பு/ தொழில்நுட்ப ஆலோசனைக்கான செலவு, நடைமுறை மூலதனத்திற்கான விளிம்புத் தொகை மற்றும் ஆரம்ப கட்ட செலவினங்கள் பழைய இயந்திரங்கள் (தொழில்முனைவோரால் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட பழைய இயந்திரங்கள் தவிர).

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி:
கடனுதவி பெற தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் 3 வார தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமாக பெற வேண்டும்.


பங்குதாரர் நிறுவனங்களின் தகுதி:
ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்முனைவோர் கூட்டாக சேர்ந்து பங்குதாரர் நிறுவனங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். அவ்வாறு உதவி பெற அனைத்துத் தொழில் முனைவோரும் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். எனினும் இதர பங்குதாரர்களுடைய சம்மதத்துடன் ஒரு பங்குதாரருக்கு மட்டுமே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

தகுதி இல்லா விண்ணப்பதாரர்கள்:
ü  மத்திய மற்றும் மாநில அரசு மூலம் செயல் படுத்தப்பட்டுவரும் PMRY, REGP, PMEGP, UYEGP, TAHDCO போன்ற நிதியுதவி திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்கள்.
ü  சுய உதவிக்குழு/ இதர குழும திட்டங்கள் மூலம் பொருளாதார செயல்பாடுகளுக்காக கடன் பெற்றவர்.
ü  வங்கிகள்/ தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் ஏற்கனவே கடனுதவி பெற்று கடனை திருப்பிக்கட்ட தவறியவர்கள்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:
விண்ணப்பம் இரண்டு நகல்களில் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சமர்பிக்கப்பட வேண்டும்.
ü  வயதிற்கான சான்று (பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி மற்றும் கல்லூரி மாற்று சான்றிதல்).
ü  இருப்பிட சான்று குடும்ப அட்டை நகல் அல்லது வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்று.
ü  பட்ட/ பட்டயப் படிப்பு/ அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி சான்றிதழின் நகல்.
ü  சாதிச் சான்றிதல்
ü  முன்னால் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள், திருநங்கையர் ஆக இருப்பின் அதற்குரிய சான்றிதல்.
ü  திட்ட அறிக்கை மற்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கான உத்தேச விற்பனை மற்றும் பணப்பாய்வு அறிக்கை.
ü  திட்ட மதிப்பீட்டில் நிலத்தின் மதிப்பு சேர்க்கப் பட்டிருந்தால் நிலப்பட்டாவின் நகல்.
ü  பட்டய கட்டுமான பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டிடத்திற்கான உத்தேச மதிப்பீடு.
ü  இயந்திரங்கள் அல்லது கருவிகளின் விலைப்பட்டியல் அசல் மற்றும் நகல்.
ü  சான்றுறுதி அலுவலரிடமிருந்து ரூ.20 மதிப்பிலான முத்திரை தாளில் பெறப்பட்ட உறுதி மொழி பத்திரம்.
ü  பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்பந்த பத்திரத்தின் நகல்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்(DIC)
கீழ்க்கண்ட தளத்தில் இத்திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.  

தேர்வு செய்யும் முறை:
ü  தகுதி பெரும் தொழில்முனைவோர் மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்கும் மாவட்ட தெரிவுக்குழு மூலமாக நடைபெறும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்து பின் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யபடும் .
ü  நேரடியாக வங்கியை அணுகி அவர்கள் ஒப்புதலுடன் வரும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தேர்வுக்குழு மூலம் விரைவாக அந்த வங்கிக்கு அனுப்பபடும்.
ü  கடன் பெரும் வங்கியின் பெயர், முகவரி மற்றும் பதிவு எண் ஆகியவை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
ü  வங்கி மேலாளரின் முன் அனுமதி பெற்ற பின் விண்ணபிப்பது சரியானது.
ü  மேற்கண்ட திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் வங்கி மேலாளரை மதியம் 3 மணிக்கு மேல் முன் அனுமதி பெற்று சந்திப்பது நன்று. உடன்  அனைத்து ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும். இதில் வங்கி மேலாளரின் முடிவு இறுதியானது.

இத்திட்டத்தில் அரசு வழங்கும் பிற சலுகைகள்:
மேலும் நீட்ஸ் திட்ட தொழில்முனைவோர் கீழ் கண்ட திட்டங்களில் பயன் பெறலாம்.
ü  3 வருடம் மின்சார மானியம் 20% பெறலாம்
ü  வாட் வரி மானியம் பெறலாம்
ü  3% பின்முனை வட்டி மானியம் பெறலாம்
ü  SIDCO சிட்கோ நிலம் பெறுவதில் முன்னுருமை அளிக்கப்படும்.
ü  நிலம் சாசனம் மற்றும் வங்கி சாசனம் கட்டணம் திரும்ப பெறலாம்.

The following are activities which are ineligible for assistance under NEEDS Scheme (இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி இல்லா தொழில்கள்):

ü  Any activity directly connected with agriculture.
ü  Sericulture (Cocoon rearing), Animal Husbandry like Pisciculture, Piggery, Poultry etc.,
ü  Manufacturing of Polythene carry bags of less than 40 microns thickness and manufacture of carry bags or containers made of recycled plastic for storing, carrying, dispensing or packaging of food stuff.
ü  Sugar.
ü  Distilleries, Brewery and Malt Extraction.
ü  Units utilizing Molasses/rectified spirit/de-natured spirit as raw material for manufacture of potable alcohol.
ü  Fertilizer manufacture and blending (Except bio-fertilizers).
ü  Mining and Quarrying Ores, minerals etc. [Excluding polishing, cutting, crushing, etc. of mined ores / minerals].
ü  Aluminium, Iron and Steel Smelting [Excluding foundries].
ü  Manufacturing of intoxicant items like Beedi / Pan / Cigar / Cigarette etc.,
ü  Saw Mills.
ü  Cement.
ü  Calcium Carbide.
ü  Slaughter House.
ü  Re-packing .of.Drugs./ Medicine / Chemical, without any processing or value addition.
ü  Azoic / Reactive Dyes.
ü  Firecrackers.
ü  Industries manufacturing and or utilizing Ozone depleting substances.
ü  Industries involving hazardous activities / classified as “Red category” by Tamil Nadu Pollution Control Board / Central Pollution Control Board.
ü  Cyanide.
ü  Caustic Soda.
ü  Potassium Chloride.
ü  Nylon, Rayon & Polyester Fibre manufacturing. [Excluding manufacture of downstream products from Nylon, Rayon & Polyester Fibre].
ü  Real Estate.

திட்ட அறிக்கை என்பது என்ன?

திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.


மேற்கண்ட சேவை பற்றிய விபரங்கள் மற்றும் திட்ட அறிக்கைகள் ஆன்லைனில் விண்ணபிக்க எங்களை அணுகவும்.

Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886


No comments:

Post a Comment