உற்பத்தி சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தமிழக அரசின் நேரடி மானிய திட்டம்-2021
உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 150.00 லட்சம் வரை மானியம் தமிழக அரசு வழங்குகிறது.
உற்பத்தி தொழில் சார்ந்த குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில்களை வங்கி கடன் மூலமாகவோ அல்லது சொந்த முதலீட்டில் துவங்கினாலும்
அதற்கான தமிழக அரசின் நேரடி மானியங்களை பெற இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் உற்பத்தி தொழில் (Manufacturing) சார்ந்த தொழில் ஆரம்பித்து நடத்துபவராக
இருந்தாலும் அல்லது நேரடியாக வங்கி கடன் மூலமாகவோ மற்றும் சொந்த முதலீட்டில்
தொழில் துவங்கினாலும் உங்களுக்கு மாநில அரசு எந்திரங்களின் மதிப்பில் 25% முதல் 35% வரை மானியமும்,
மூன்றாண்டுகள் மின்சார
மானியமும் வழங்குகிறது.
இந்த திட்டம் பற்றி முழுமையாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
வரையறை:
குறு, சிறு மற்றும்
நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வகைபாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
மேம்பாட்டு சட்டம் 2006-ன் படி
வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி இந்நிறுவனங்களை இயந்திரம் மற்றும் தளவாடங்களின் (நிலம் மற்றும் கட்டடங்கள்
தவிர) முதலீட்டின்படி உற்பத்தி அளவு வரையறுக்கப்பட்டது அட்டவணையில்
கொடுக்கப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறுந்தொழில் ஆரம்பிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும்
வழங்கப்பட்டு வரும் சலுகைத் திட்டங்கள் கீழ்வருமாறு:
1) முதலீட்டு
மானியம்:
தகுதியான இயந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிகப்பட்சமாக
ரூ.25.00 இலட்சம் வரை.
மகளிர், பட்டியலிடப்பட்ட
இனம் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தொழில் முனைவோராக இருக்கும்
நேர்வுகளில் அவற்றின் தகுதியான இயந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.5.00 லட்சம்,
கூடுதல் முதலீட்டு மானியம்.
மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு இயைந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்
நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு
மாசுக்கட்டுப் பாட்டு வாரியச் சான்றின் பேரில் அந்நிறுவனங்களுக்கு தகுதியான
இயந்திர தளவாடங்கள் மீதான முதலீட்டின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.10.00 இலட்சம் கூடுதல் முதலீட்டு மானியம்
வழங்கப்படும்.
உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து முதல் 5 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்குள்,குறைந்தபட்சம் 25 வேலையாட்களைப் பணியில் ஈடுபடுத்தும்
நிறுவனங்களுக்கு அவற்றின் தகுதியான இயந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின்
மதிப்பில் 5விழுக்காடு,
அதிகபட்சம் ரூ10.00 இலட்சம் வேலைவாய்ப்பு பெருக்க மானியம்
அடிப்படைத் தகுதி
மாநிலத்தில் எப்பகுதியில் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி
நிறுவனங்கள்.
தமிழ்நாட்டில் எப்பகுதியிலும் நிறுவப்படும் கீழ்க்கண்ட 13 சிறப்பு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் (கூடுதல்
முதலீட்டு மானியம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்க மானியம் நீங்கலாக)
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில்
நிறுவனங்கள்.(தமிழக அரசின் இணையத்தளத்தில் பார்க்கவும்).
மாநிலத்தின் 385 வட்டாரங்களில்
அமைக்கப்படும் வேளான் சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
மேற்கண்ட குறுந்தொழில்கள் விரிவாக்கம் மற்றும் மாற்று தொழில் துவங்கும் போது
அதன் மூலதனம் முதலில் செய்த மூலதனத்தில் 25% அதிகமானால் உங்கள் விரிவாக்கத்திற்கும் எந்திர
மதிப்பில் மானியம் பெறலாம். அதிகபட்சம் ரூ.150.00 லட்சம்
இந்த மானியம் பெற நீங்கள் உற்பத்தி துறைக்கு வாங்கிய எந்திரங்களின்
விலைபட்டியல் தேதியில் இருந்து ஓர் ஆண்டுக்குள் நீங்கள் விண்ணபிக்க வேண்டும். தொழில்
துவங்கி அதற்கான உத்யம் எண் (MSME – UDYAM REGISTRATION) பெற்றிருக்க வேண்டும்.
2) குறைந்தழுத்த மின் மானியம்
20 விழுக்காடு
குறைந்த அழுத்த மின் மானியம், வணிக ரீதியாக
உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற
நாள் இவற்றில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.
அடிப்படைத் தகுதி
மாநிலத்தில் எப்பகுதியில் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி
நிறுவனங்கள்.
மாநிலத்தின் 385 வட்டாரங்களில்
அமைக்கப்படும் வேளான் சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில்
நிறுவனங்கள்.
மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும்
மாற்றுத் தொழில்கள் துவங்கும்பொழுது.
இந்த மானியம் புதிய இணைப்பு பெற்றவகளுக்கு மட்டும் வழங்கப்படும்
3) மின்னணு வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மானியம்
மின்னணு வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மின்னணு ஆசனங்களின் சார்ஜ்
செய்யும் தொழில் உபகரணங்களை உபயோகிக்கும் உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு
அதிகப்படியாக 20% மானியம்
வழங்கப்படும் அதிகபட்சமாக ரூ. 10.00 இலட்சம் வரை
மானியம்
4) மின்னாக்கி மானியம்
இம்மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் எப்பகுதியிலும் அமைந்துள்ள குறு சிறு
மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வாங்கியுள்ள மின்னாக்கியின் மதிப்பில் 25
விழுக்காடு (320
KVA வரை) அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை மின்னாக்கி மானியம்
5) பின்முனை வட்டி மானியம்
குறு, சிறு மற்றும்
நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப்
படுத்துதல், கடன் உத்தரவாத
நிதி ஆதாரத் திட்டம் ஆகியவற்றிற்காக வாங்கும் ரூ.1 கோடி வரையிலான கடன்களின் மீது 5ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ. 25 இலட்சத்திற்கு கடனுக்கான வட்டியில் 5 விழுக்காடு என்ற அளவில் பின்முனை வட்டி
மானியமாக வழங்கப்படுகிறது.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீன
படுத்துதல், தேசிய பங்கு நிதி
திட்டம், சர்வதேச
தரநிலைப்படுத்தல் நிறுவனத்தின் தரச்சான்று பெறுதல், காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை
பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கடன்
உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கான காலக்கடன்களுக்கும்,
5 விழுக்காடு
பின்முனைவட்டி மான்யம் வழங்கப்பட்டு வருகிறது.
தொழில் நுட்ப மேம்பாட்டுக்கான திட்டங்கள்
குறு, சிறு மற்றும்
நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக கீழ்கண்ட திட்டங்கள்
செயல்பாட்டில் உள்ளன:-
உரிமைக்காப்பு (கண்டறிதல் உரிமை) பதிவு விண்ணப்பத்திற்கான தொகையில் ஒவ்வொரு
விண்ணப்பத்திற்கும் 50 விழுக்காடு,
அதிக பட்சமாக ரூ.3 இலட்சம் மானியம்.
வர்த்தக குறியீடு பதிவு தொகையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவானதோ.அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம் தொழில்
குழுமங்கள் மற்றும் சிறு கருவி மையங்கள் அமைப்பதற்கு, அவற்றின் திட்டமதிப்பீட்டில் 25 விழுக்காடு, அதிக பட்சமாக ரூ.1 கோடி வரை மானிய உதவி.
தூய்மையான, மின் திறனுள்ள
தகவல் தொழில் நுட்பம் சார்புடைய தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப
மேம்பாட்டு நிதி ஏற்படுத்துதல்.
நேர்த்திமிகு மையங்கள் மற்றும் தொழில் நுட்ப வணிக சேவை வளர்ப்பகங்களை
உருவாக்கி அதன் மூலம் நவீன உற்பத்தி உத்திகள் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு
மேற்கொள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப வணிக சேவை வளர்ப்பகம் / நேர்த்திமிகு மையத்திற்கும்
ரூ.50 இலட்சம் வரை மானிய உதவி.
சந்தை வாய்ப்பு உதவி
அரசு, குறு மற்றும்
சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட சந்தை வாய்ப்பு உதவிகளை
வழங்குகிறது.
ஒப்பந்தப்புள்ளிகளில் கலந்து கொள்வதற்கு முன்வைப்புத் தொகை
செலுத்துவதிலிருந்து விலக்கு.
இம்மாநிலத்திலும் மற்றும் மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் பொருட்காட்சிகளில்
குறு, சிறு மற்றும் நடுத்தரத்
தொழில்கள் சார்புடைய சங்கங்கள் கலந்து கொள்ளும் நேர்வுகளில் அரங்க வாடகையில் 50 விழுக்காடு மானியம்.
பொதுவான பெயர் அல்லது பொது வணிக சின்னத்தில் விற்பனை செய்ய ஆதரவு அளித்தல்.
சிறப்பு மானிய திட்டம்:
தமிழகத்தில் எந்த இடத்தில துவங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும்
திட்டத்தின் கீழ் 25% மானியம்
வழங்கப்படும்.
1) எலக்ட்ரிகல் &
எலக்ட்ரானிக்ஸ்
தொழிற்சாலைகள்
2) தோல் மற்றும்
தோல் பொருட்கள்
3) மோட்டார் உதிரி
பாகங்கள்
4) மருந்து
பொருட்கள்
5) சூரிய மின் சக்தி
உற்பத்தி சாதனங்கள்
6) ஆபரண தங்கம்
மற்றும் வைரம் ஏற்றுமதி
7) மாசு கட்டுபாட்டு
கருவிகள்
8) விளையாட்டு
பொருட்கள்
9) குறைந்த
முதலீட்டு கட்டுமான பொருட்கள்
10) ரெடிமேட்
கார்மெண்ட்ஸ்
11) உணவு பதப்படுத்துதல்
12) பிளாஸ்டிக் (தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள்
தவிர)
13) ரப்பர் பொருட்கள்
14) தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு
மாற்றுபொருட்கள் மின்சாதன வண்டிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள்
15) மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள்
16) பொறியியல் துணி வகைகள் மருத்துவ துணி வகைகள்
17) வானூர்தி பாதுகாப்புத்துறை பொருட்கள்
உபகரணங்கள்
18) மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி
19) பயோ டெக்னாலஜி பெட்ரோகெமிக்கல் ஸ்பெஷாலிட்டி
கெமிக்கல்ஸ் இண்டஸ்ட்ரி 4.0
20) மின்னணு கழிவுகள் பிரித்தல்
மேலும் அரசால் பிற்காலத்தில் அறிக்கப்படும் பிற தொழில்கள் அடங்கும்.
அதிகபட்சம் ரூ.150.00 இலட்சம்
இந்த தொழில்களுக்கு எந்திர மதிப்பில் 25% மானியமும் பின்னர் அதன் விஸ்தரிப்பு அல்லது
வேறு தொழில் ஆரம்பித்தாலும் அந்த எந்திரங்களின் மதிப்பில் 25% மானியமாக வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.150.00இலட்சம்
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்:
ü உங்கள் தொழில்
உற்பத்தி துறையை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
ü குறுந்தொழிலாக இருந்தால் எந்த பகுதியிலேயும்,
தொழிலாக இருந்தால் எந்த
தொகுதியிலேயும் ஆரம்பித்தாலும் உங்களுக்கு மானியம் கிடைக்கும்.
ü சிறு மற்றும் மத்திய தொழிலாக இருந்தால்
குறிப்பிட்ட 251 பின் தங்கிய
வட்டாரமாகவும் தொழிப்போட்டையாகவும் இருக்க வேண்டும்.
ü நீங்கள் ஆரம்பிக்கும் உற்பத்தி தொழில்
மானியத்திற்கு ஏற்புடைய அல்லது மானியம் இல்லையென்று அறிவிக்கப்பட்ட பட்டியலில்
இடம்பெற்று இருக்க கூடாது.
ü எந்திரங்கள் வாங்கிய GST நம்பருடன் கூடிய ரசீது 12 மாதங்கள் கடந்து இருக்க கூடாது.
ü நீங்கள் தொழில் துவங்கி UDYAM எண் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
ü புதியதாக வாங்கும் எந்திரங்களுக்கு அதன் விலை
பட்டியலில் உள்ள பணத்திற்கே உங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
ü மானியம் பெற தனித் தனியாக விண்ணப்பங்களை மாவட்ட
தொழில் மையத்தில் உரிய நேரத்தில் எல்லா பதிப்புகளுடன் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
ü மாவட்ட தொழில் மையத்தின் ஆய்வுக்கு பிறகே
உங்களுக்கு மானியம் பரிந்துரை செய்வார்கள்.
மேற்கண்ட கடன் திட்டம் பற்றிய ஆலோசனைகள், வங்கிகளுக்கான
திட்ட அறிக்கைகள் தயாரித்தல் மற்றும்
ஆன்லைனில் விண்ணபிக்க எங்களை அணுகலாம்.
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886
Email: msmebusinesshelp@gmail.com
Facebook: https://www.facebook.com/msmesupport