NSIC
- தேசிய சிறுதொழில் கழகம் ( Bank Credit Facilitation Scheme)
நீங்கள்
புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே உற்பத்தி செய்து வரும் தொழில் அதிபர்கள் தாங்கள்
தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த கடன் பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை
மத்திய, மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும்,
உங்கள் தொழிற்சாலை எந்த நிலையில் உள்ளது என தரச் சான்றிதல் பெறுவதற்கும், நம்
நாட்டிலும் அயல் நாட்டிலும் நடைபெறும் கண்காட்சிகளில் உங்களின் உற்பத்தி பொருட்களை
காட்சிபடுத்தவும், தங்கள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய அதனைப் பற்றிய
வழிகாட்டல் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தல், மத்திய மாநில அரசின்
டெண்டர்களில் கட்டணமில்லாமல் விண்ணப்பிக்கவும் மற்றும் விண்ணப்பிக்கும் போது
நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய முன் பணம் முழுவதிலிருமிருந்து விலக்கு பெறுவதற்கும்
இப்படி எண்ணற்ற சேவைகளை உங்களுக்குகாக செய்ய காத்திருக்கும் நிறுவனம் தான் மத்திய
அரசின் தேசிய சிறுதொழில் கழகம் (National Small Industries Corporation –
NSIC) ஆகும்.
தேசிய
சிறுதொழில் கழகத்தின் பணிகள் பல்வேறு இருந்தாலும் ஒரு சிலவற்றை இங்கே காணலாம்.
தேசிய சிறுதொழில் கழகம் இந்திய
அரசின் மினி ரத்னா நிறுவனமாகும். 1955-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் குறு, சிறு
மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றைத் தொடங்குவதற்கும் தேவையான
உதவிகளை அளித்து வருகிறது.
வங்கிகடன்:
- 1) சிறுதொழில் முனைவோர்கள் கடன் பெற தங்கள் கடனுக்கான திட்ட அறிக்கையுடன் தேசிய சிறுதொழில் கழகத்தில் விண்ணபித்து கடன் பெறலாம்.
- 2) இதன்படி, புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனை வோர்கள் வங்கிகளில் சென்று கடன் கேட்டால் சில நேரங்களில் அவர்களுக்கு கடன் நிராகரிக்கப்படுகிறது. அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் திட்ட அறிக்கை (புராஜெக்ட் ரிப்போர்ட்) ஆகி யவை சரியாக இல்லாததே இதற்குக் காரணம். அவர்கள் தேசிய சிறுதொழில் கழகம் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்தால் அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து விண்ணப்பிக்க உதவுவார்கள்.
- 3) புதிதாக தொழில் தொடங்க விரும்பும் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் தொழில் தொடங்குவதற்கான பதிவு செய்தல், உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களை வாங்குதல், மூலப் பொருட்களை வாங்குதல் ஆகியவற்றுக்கு தேசிய சிறுதொழில் கழகம் உதவி செய்து வருகிறது.
- 4) தேசிய சிறுதொழில் கழகம் குறிப்பிட்ட சில வங்கிகளுடன் சேர்ந்து பணியாற்ற பரிந்துறை ஒப்பந்தம் செய்து உள்ளனர். அந்த வங்கிகளின் பட்டியல் இங்கே இணைத்துள்ளோம். எனவே புதிய தொழில் மற்றும் தொழில் விரிவாக்கம் இவற்றிற்கு கடனுதவி பெற நேராக வங்கிகளை அணுகுவதை விட தேசிய சிறுதொழில் கழகத்தை அணுகினால் உங்களுக்கு நிதியுதவி பெற தேவையான முறைகளை விளக்கி தொழில்முனைவோர் தொழில்கடன் கடன் பெற ஒரு பாலமாக செயல்படுவார்கள்.
S.No.
|
Name of the Bank
|
Website
|
1.
|
Axis Bank
|
|
2.
|
Bank of Maharashtra
|
|
3.
|
Central Bank of India
|
|
4.
|
Oriental Bank of Commerce
|
|
5.
|
State Bank of Hyderabad
|
|
6.
|
UCO Bank
|
|
7.
|
Bank of Baroda
|
|
8.
|
Yes Bank
|
|
9.
|
IndusInd Bank Ltd.
|
|
10.
|
Vijaya Bank.
|
|
11.
|
Federal Bank.
|
|
12.
|
Corporation Bank
|
|
13.
|
State Bank of Travancore
|
|
14.
|
Indian bank
|
|
15.
|
Punjab and Sindh Bank
|
|
16.
|
Indian Overseas Bank
|
|
17.
|
Syndicate Bank
|
|
18.
|
Canara Bank
|
|
19.
|
State Bank of India
|
|
20.
|
ICICI BANK
|
|
21.
|
DCB Bank
|
|
22.
|
State Bank of Bikaner and Jaipur
|
|
23.
|
State bank of Patiala
|
|
24.
|
Dena bank
|
|
25.
|
Kotak Mahindra Bank
|
|
26.
|
Reliance Commercial Finance
|
|
27.
|
Punjab National Bank
|
|
28.
|
State Bank of Mysore
|
|
29.
|
Bhartiya Mahila Bank
|
|
30.
|
The South Indian Bank
|
|
31.
|
HDFC Bank
|
|
32.
|
Tamilnad Mercantile Bank Ltd
|
|
33
|
Bestdealfinance.com Pvt. Ltd. (RUBIQUE)
|
Contact
Address
NSIC Limited
Zonal Office (South I)
New no.422,
Anna Salai Chennai 600 006.
Tamil Nadu
Tel: 044-2829 1943 , 2829 4541 ;
Fax: 044-2829
5791
Email:
zgmsouth1@nsic.co.in
தொழிற்சாலைகளின் தர சான்றிதல்:
நிறுவனங்கள்
தொழில்கடன் பெற வங்கிகளுக்கு விண்ணப்பிக்கும் போது அந்நிறுவனங்களின் தரம் குறித்து
வங்கிகள் கேட்கின்றன. அதற்காக அந்நிறுவனங்களை கிரிசல், பிட்ச் போன்ற தர
நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இவ்வாறு
தரச்சான்றிதழ் கோரி குறு, சிறு நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்
போது அதற்கு ஆகும் செலவில் 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இப்படி பெறும் தரச் சான்றிதல் உங்கள் தொழிற்சாலை பின் தரத்தை உறுதி
படுத்தும் இதனால் வங்கிகள் உங்கள் தொழிலின் தரம் கண்டு உடனுக்குடன் வங்கிகடன்
கொடுக்கும் மற்றும் வட்டி விகிதம் குறைத்து குறைந்த வட்டியில் உங்களுக்கு கடன்
வழங்கும்.
நல்ல தரமுள்ள தொழில்களுக்கு கடன் கொடுப்பதால் வங்கிகளுக்கு கடன்
கொடுக்கும் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த தரம் பெரும்பாலும் நல்ல நிலையில்
நடந்து கொண்டு உள்ள குறு மற்றும் சிறு தொழிலுக்கு பொருந்தும்.
விற்பனை உதவி:
தேசிய சிறுதொழில் கழகம் குறு மற்றும் சிறு தொழில்களின் உற்பத்தியாகும்
பொருட்களின் விற்பனையில் பெரிய அளவில் உதவி செய்கின்றன. அவற்றை பற்றிய ஒரு பார்வை
உங்களுக்காக..
மத்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து
நிறுவனங்கள் குறிப்பாக நெய்வேலி அனல்மின் நிறுவனம், பாரத மின்பகு நிறுவனம், கனிம
நல நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள், மூலப் பொருட்கள்
மற்றும் பழுது பார்க்கும் போது உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்தையும் டெண்டர்
மூலமே உறுதி செய்து வாங்குகின்றனர்.
இதில் குறு மற்றும் சிறு தொழில்கள் தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவு
செய்யும் போது அவர்களின் தொழிலுக்கு தகுந்தாற்போல இந்த டெண்டர்களில் கலந்து
கொள்ளலாம். டெண்டர் பெற முதலில் விண்ணப்ப கட்டணம் கட்ட வேண்டும். இது சில ஆயிரம்
ரூபாய் இருக்கும். தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவு பெற்ற குறு மற்றும் சிறு
தொழிலாக இருப்பின் இவை இலவசமாக விண்ணபிக்கலாம்.
டெண்டர்களை பெற விண்ணப்பிக்கும் போது காப்பு பணமாக (EMD) 10% வரை கட்ட
வேண்டும். நீங்கள் தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவு பெற்றிருந்தால் பதிவில்
உங்கள் உற்பத்தி பொருள் அல்லது சேவை இருப்பின் நீங்கள் முழு விலக்கு பெறுவீர்கள்.
ஒவ்வொரு மத்திய மாநில அரசின் அமைச்சகமும் பொதுத்துறை நிறுவனங்களும் 20% வரை குறு மற்றும் சிறுதொழில் முனைவோரிடம் இருந்து
கண்டிப்பாக பொருட்கள் வாங்க வேண்டும் அதில் 4% தாழ்த்தப்பட்ட
தொழில்முனைவோர்களின் நிறுவனங்களில் இருந்து வாங்க வேண்டும்.
பல்வேறு வகையான 358 பொருட்கள் குறு
மற்றும் சிறுதொழில் முனைவோரிடம் மட்டும் வாங்க வேண்டும். அதன் பட்டியல் தனியாக
உள்ளது. டெண்டர் கொடுக்கும் போது பெரிய நிறுவனங்கள் விற்பனையாளர்களை விட விலை
அதிகமானாலும் அது 15% க்கு
மிகாமல் இருந்தால் அந்த குறு மற்றும் சிறு நிறுவனத்திற்கு அதிகபடியான தொகைக்கே
டெண்டர் அளிக்க வேண்டும். இந்த அனைத்து உதவிகளையும் பெற நீங்கள் தேசிய சிறுதொழில்
கழகத்தில் பதிவு பெற்றவராக இருத்தல் அவசியம்.
வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டில் கண்காட்சிகளில் பங்கு பெறுதல், சில
முக்கிய கண்காட்சிகளில் தேசிய சிறுதொழில் கழகம் பங்கு பெறும் அப்போது குறைந்த
வாடகையில் உங்கள் பொருட்களை காட்சி படுத்த இடம் ஒதுக்கும்.
இணையதள போர்டல்:
தேசிய சிறுதொழில் கழகம் புதிய இணையதள சேவையை B2B வெப்
போர்டல் (B2B Web
Portal) நிறுவி உள்ளது. இந்த இணையதளத்தில் விற்பனை
மற்றும் வாங்குபவர் முகவரி தேடல் அனைத்தும் உள்ளது. தொழில்முனைவோருக்கு தேவையான
அனைத்து உதவிகளையும் இவை செய்யும்.
தேசிய அளவில் அனைத்து போது நிறுவனங்களுக்கும் தங்கள் தேவைகளை டெண்டர்
மூலம் அனுப்பும் அந்த டெண்டர் பற்றிய விபரங்களையும் தேசிய சிறுதொழில் கழகத்துடன்
பதிவுபெற்று உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
திட்ட
அறிக்கை என்றால் என்ன??
திட்ட
அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த
தொழில் லாபகரமான தொழிலா? அந்த
தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த
தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த
எந்திரங்களின் விலை என்ன? தொழில்
எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த
இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால்
வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை
விபரம், மூலப்பொருட்கள்
விபரம், பணியாட்கள்
விபரம், மின்சார
தேவை, மாத
மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப
பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை
செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.
மேலும்
இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில்
இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு
வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.
பெரிய
கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even
Point, உற்பத்தி
செலவு 5 வருட
அட்டவணை Profitability
Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின்
நிதிநிலை அறிக்கை Balance
Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில்
இருக்க வேண்டும்.
திட்ட
அறிக்கை தெளிவாகவும், சரியாகவும்
புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.
மேலும் இத்திட்டம் பற்றிய விபரங்கள், தொழில் திட்ட அறிக்கைகள் மற்றும்
கடன் பெற வழிவகைகள் அனைத்திற்கும் எங்களை அணுகலாம்..
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross,
Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886
No comments:
Post a Comment