பாண்டிச்சேரி மாநிலத்தில் புதிதாக தொழில்
துவங்க 45% மானியம், அதிகபட்சமாக ரூபாய் 75 லட்சம் வரை மானியம் பெறலாம்.
பாண்டிச்சேரி அரசு
தொழில் அபிவிருத்திக்காகவும், வேலைவாய்ப்பினை உருவாக்கவும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் தொழில்
துவங்குபவர்களுக்கு 40% வரை மானியம் வழங்க வழிவகை செய்துள்ளது. அது மட்டுமின்றி
16 வகையான சலுகைகள் மற்றும் மானியங்கள் கொடுத்துள்ளது.
அவைகளை என்ன என்பதை பார்க்கலாம்.
தொழில் மூலதன மானியம்:
- இது புதிய மற்றும் விரிவாக்கம் செய்யும் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு பொருந்தும்.
- குறு மற்றும் சிறு தொழில் மூலதன மானியம் 40%. இது நிலம், கட்டிடம் மற்றும் எந்திரங்களின் முதலீட்டில் செலவிடும் தொகையில் ரூபாய் 40 லட்சம் வரை மானியம் பெறலாம்.
- மத்திய மற்றும் பெருந்தொழில்களுக்கு 35% மானியம் அதிகபட்சம் ரூபாய் 35லட்சம் வரை பெறலாம்.
- பெண்கள் மற்றும் எஸ்.சி/ எஸ்.டி தொழில் முனைவோருக்கு 45% மானியமாகவும் அதிக பட்சம் 75 லட்சம் வரை மானியம் பெறலாம்.
வாட் வரி மானியம்:
(இது
ஜி.எஸ்.டி-யாக மாறியுள்ளதால் அதற்கான மாற்று ஆணை பிறப்பித்த பிறகே இது நடைமுறைக்கு
வரும். பழைய ஆணையை பார்போம்)
- குறு மற்றும் சிறு தொழில்கள் 100% வரை கட்டும் வாட் வரியை 5 வருடத்திற்கு திரும்ப பெறலாம். இதையே மகா மற்றும் யாமன் இடங்களில் 7 வருடம் வரை மானியமாக திரும்ப பெறலாம்.
- மத்திய தொழில்களுக்கு 75% வரை வாட் மானியம் 5 வருடங்களுக்கும் மகா மற்றும் யாமன் இடங்களுக்கு 7 வருடம் வரை மானியமாக திரும்ப பெறலாம்.
- பெருந்தொழில்கள் கட்டும் வாட் வரியை 50% மானியமாக பெறலாம். மகா மற்றும் யாமன் இடங்களுக்கு 7 வருடம் வரை மானியமாக திரும்ப பெறலாம்.
வட்டி மானியம்:
வங்கிகளில்
காலகடன் நடைமுறை மூலதன கடன் பெறும் தொழிற்சாலைகள் தாங்கள் கட்டும் வட்டியில்
இருந்து 25% மானியமாக பெறலாம். இது 5 ஆண்டுகளுக்கு பெறலாம். வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை பெறலாம். மகா மற்றும் யாமன் இடங்களுக்கு 7 வருடம் வரை பெறலாம்.
முத்திரை தாள் வரி தள்ளுபடி:
நிலம் வாங்க,
நிலம் ஈடு கொடுக்க, அடமானம் வைக்க நிலம், கட்டிடம் முதலியவற்றிற்கான முத்திரை தாள்
கட்டணம் 100% வரை மானியமாக பெறலாம்.
அடிப்படை உள்கட்டமைப்பு அமைக்க மானியம்:
அடிப்படை
உள்கட்டமைப்பு ஐ.டி நிறுவனங்களுக்கு அமைக்க 30% வரை மானியம்
ரூபாய் 1 கோடிக்கு மேல் பெறலாம். குறைந்த அளவு 50,000 சதுர அடி
முதல் இருக்க வேண்டும். இது ஐ.டி தொழிலுக்கான இடமாக இருக்க வேண்டும்.
மின்சார
மானியம்:
தொழில்கள்
உபயோகிக்கும் மின்சாரம் 5
வருடங்களுக்கு ஒரு
யூனிட் மின்சாரத்திற்கு 50 பைசா மானியமாக திரும்ப பெறலாம். மகா மற்றும் யாமன்
இடங்களுக்கு 7 வருடம் வரை பெறலாம்.
ஜெனரேட்டர் மானியம்:
தொழில்கள் வாங்கும் ஜெனரேட்டர்களுக்கு 50% வரை ஜெனரேட்டர் மானியம் அதிகபட்சம் 5 லட்சம் வரை மானியமாக பெறலாம்.
தொழிலாளர்களுக்கு
வழங்கும் சம்பளத்தில் 20%
வரை மானியமாக திரும்ப பெறலாம். தொழிலாளர்கள்
பி.எப் நிதி பெரும் திட்டத்தில் இணைந்து இருத்தல் அவசிசம். ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 5 லட்சம் வரை மானியமாக பெறலாம். இவை அனைத்தும்
பாண்டிச்சேரியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 60% பேருக்கு மேல் இருத்தல் அவசியம்.
மாசுக் கட்டுபாட்டு உபகரணங்களுக்கு மானியம்:
அணைத்து தொழில்களும்
மாசுக் கட்டுபாட்டு உபகரணங்களுகள் உபயோகித்ததால் உபகரணங்களுக்காண செலவில் 25% வரை மானியம் வழங்கப்படும்.
திறன் பயிற்சி மானியம்:
அணைத்து தொழில்களும்
தொழிலாளர்களுக்கு இரண்டு வாரம் திறன் பயிற்சி அளிக்க ரூ.3000/- வரை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மானியம் பெறலாம். இதற்கு
புதுச்சேரி மேனேஜ்மென்ட் புரடக்டிவிடி கவுன்சிலில் அளிக்க வேண்டும்.
தர நிர்ணய சான்றிதல் மானியம்:
தர நிர்ணய
சான்றிதல்கள் மிக அவசியம் அணைத்து தொழில்களும் 3 சான்றிதல்கள் வரை பெற செலவில் 50% வரை மானியம் பெறலாம். ரூ.2 லட்சம் வரை மானியம்.
அறிவு சார் சொத்துரிமை காப்பீடு (ஐ.பி.ஆர்) மானியம்:
அறிவு சார்
சொத்துரிமை ஐ.பி.ஆர் பெற அணைத்து தொழில்களும் காப்பீடு பெறும் செலவில் 50% வரை மானியம். உள்நாட்டு காப்பீடு பெற ரூபாய் 2 லட்சம் வரையும், வெளிநாட்டு காப்பீடு பெற ரூபாய் 5 லட்சம் வரை மானியம் பெறலாம்.
சந்தை படுத்துதல் உதவி மானியம்:
இண்டர் நேசனல்
டிரேட் கண்காட்சிகளில் கலந்து கொள்ளும் தொழில் சங்கங்களுடன் இணைந்த தொழில்
அதிபர்கள் 50% வரை செலவில் மானியமாக ரூபாய் 5 லட்சம் வரை பெறலாம்.
மின்சாரம் மற்றும் தண்ணீர் சேமிப்புக்கான மானியம்:
மின் மற்றும்
தண்ணீர் சேமிப்புக்காக செய்யப்படும் கட்டமைப்புகளுக்கு 50% வரை மானியம்
பெறலாம். ரூ.25,000/- வரை பெறலாம்.
மாநில பரிசு:
ஓவ்ஒரு அண்டும் சிறந்த
தொழில் அதிபருக்கு மாநில சிறந்ததொழிலுக்கான பரிசு ரூபாய் 2 லட்சம் பரிசாக அளிக்கப்படும்.
நலிவடைந்த தொழில்களுக்கு புனரமைப்பு திட்டம்.
ஒரு முனையில்
தொழில் முனைவோருக்கு அனைத்து சான்றுகளையும் பெற்று தரும் முறையும் உள்ளது.
மேலும் விபரங்களுக்கு.
மாவட்ட தொழில்
மையம்
தொழில் பேட்டை,
தட்டன் சாவடி, புதுசேரி-605009
போன்: 0431- 2248391
மேலும் விபரங்களுக்கும் வங்கிகளில்
கடன் பெற தேவையான தொழில் திட்ட
அறிக்கைகள் பெறவும் அணுகலாம்.
Sastha
Startup Solutions
No.9,
Second Floor, Surya Complex
9th Cross,
Thillainagar, Trichy-18
Mobile:
+91 9789737886
No comments:
Post a Comment