TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION (TIIC)
தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது.
புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும்
நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும்
நிதியுதவி அளிக்கிறது.
குறிப்பாக நிலம்,
இயந்திரம், கட்டிடம் போன்ற அடிப்படை
முதலீடுகளுக்கு கடன் வழங்குகிறது. தொழிலை விரிவாக்கம் செய்யவும், நவீனப்படுத்தவும் இந்த நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கலாம். உற்பத்தித்
தொழில்கள் தவிர, ஓட்டல்கள் மருத்துவமனை, சுற்றுலா உள்ளிட்ட சேவை துறைச் சார்ந்த தொழில்கள் தொடங்கவும் கடனுதவி
வாங்கலாம்.
குறு,
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை
அடிப்படையில் முதலீட்டுக் கடன் கிடைக்கும். முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு 40
சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குகிறது இந்த நிறுவனம்.
தமிழக அளவில் 6 மண்டல அலுவலகங்கள், 25 கிளை
அலுவலகங்கள் 5 கள அலுவலகங்களைக் கொண்டு தொழில்
முனைவோர்களுக்கு சேவை செய்து வருகிறது.
தொழில் முனைவோர்
ஆரம்ப முதலீடுகள் கிடைக்காமல் தொழிலை மேற்கொள்ள தயங்கும்போது,
திட்டத்தின் அடிப்படையில் அவர்களை ஊக்குவிக்கிறது. தொழிற்கடனுக்காக
வங்கிகளை நாடுவதைவிட, தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன்
பெறுவது எளிதானது. மேலும் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகள் நேரடியாக தொழில்
முனைவோரைச் சென்று சேர தொழில் முதலீட்டுக் கழகமும் உதவி செய்கிறது. கடன் வழங்குவது
தவிர உறுப்பினர்களுக்கான தொழிற் காப்பீடு செய்யவும் உதவி செய்து வருகிறது.
எதற்கெல்லாம்
கடன் வாங்க விண்ணப்பிக்கலாம்?
நீண்ட கால
அடிப்படையில் காலமுறைக் கடன்களை வழங்கி வருகிறது. புதிய தொழில் தொடங்க,
ஏற்கெனவே மேற்கொண்டு வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும், தொழிலை நவீனப்படுத்தவும் இதன் மூலம் கடன் வாங்கலாம். கட்டிடம் தொழில்
இயந்திரங்கள், மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த கடன்கள்
வழங்கப்படுகிறது.
தவிர தொழில்
முனைவோர்கள் மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து பெறும் தொழில் ஆணைகளுக்கு ஏற்பவும்
கடன் கிடைக்கும். அரவை மில்கள், ஆலைகள், அலோபதி, ஆயூர்வேத மற்றும் பல் மருத்துவமனைகள்
அமைப்பதற்கான கடன், குளிர்பதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், வணிக வளாகம், சமூக கூடங்கள், திருமண மண்டபங்கள் அமைத்துக்
கொள்வதற்கான கடனுதவிகளையும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் செய்து வருகிறது.
குறு மற்றும் சிறு தொழில்களுக்கான காலக் கடன் மற்றும் நடைமுறை மூலதனக்
கடன் திட்டம்:
கடன் பெற தகுதியான
தொழில்கள்:
இக்கழகத்தில் நிதியுதவி
பெறத் தகுதியான தொழில் நிறுவனங்கள் கீழ்காணும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்க
வேண்டும் அல்லது ஈடுபட வேண்டும்.
1. பொருட்கள் உற்பத்தி செய்தல்
2.
பக்குவப்படுத்தல்
3.
சுரங்கத் தொழில்
4.
மின்சாரம் அல்லது வேறு திறன் உற்பத்தி செய்தல்
5.
மருத்துவ இல்லம்
அமைத்தல்
6.
பராமரிப்புத் தொழில்
7.
பழுது பார்த்தல், சோதனை செய்தல்
8.
மரக்கலங்கள், மோட்டார் படகுகள், டிராக்டர்கள் பழுது பார்த்தல்
9.
தங்கும்
விடுதிகள்
10. வாகனங்கள் வாங்குதல்
11. மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடிப்பு சாதனங்கள் தயாரித்தல்
கடன் தொகையின் அளவு:
குறு மற்றும் சிறு
தொழில்களின் மொத்த தேவை 200 லட்சத்திற்கும்
மிகாமல் இருக்க வேண்டும். மொத்த திட்ட மதிப்பு கால கடன் மற்றும் நடைமுறை மூலதன கடன் (பயனாளியின்
பங்கு நீங்கலாக).
பயனாளியின் பங்குத்
தொகை:
பயனாளியின் பங்காக 25-35% தொழில் முதலீடாக
கொண்டு வர வேண்டும். NEEDS திட்டமாக இருந்தால் 05% தொழில் முதலீடாக கொண்டு வர வேண்டும்.
கடன் பெற தேவையான
சொத்து பிணையம்:
நடைமுறை மூலதன கடன் – 100%
காலக் கடன் – 50%
கடனை திரும்ப செலுத்தும் காலம்:
கலக் கடன் – 5 முதல் 7 ஆண்டுகள் வரை
நடைமுறை மூலதனக் கடன் – 3 முதல் 4 ஆண்டுகள் வரை
புதிய மற்றும் நடைமுறையில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்களுக்கான
கடன் திட்டம்:
திட்ட மதிப்பு:
குறு மற்றும் சிறு
தொழில்களின் மொத்த தேவை 50 லட்சத்திற்கும்
மிகாமல் இருக்க வேண்டும். மொத்த திட்ட மதிப்பு கால கடன் மற்றும் நடைமுறை மூலதன கடன் (பயனாளியின்
பங்கு நீங்கலாக).
கடன் தொகையின் அளவு:
புதிய தொழில்களாக
இருந்த திட்ட மதிப்பில் 80%
அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை பெற முடியும்.
நடைமுறை தொழிலாக
இருந்தால் திட்ட மதிப்பில் 75%
அதிகபட்சமாக ரூ.37.50 லட்சம் வரை பெற முடியும்.
பயனாளியின் பங்குத்
தொகை:
பயனாளியின் பங்காக குறைந்த
பட்சம் 20% தொழில் முதலீடாக
கொண்டு வர வேண்டும்.
கடன் பெற தேவையான
சொத்து பிணையம்:
அரசினால் நிர்ணயம்
செய்யப்படும்.
கடனை திரும்ப செலுத்தும் காலம்:
அதிக பட்சம் 06 ஆண்டுகள் வரை.
நடைமுறை மூலதனக் கடன் திட்டம் (உற்பத்தி தொழில்கள் அரிசி ஆலைகள்
உட்பட):
கடன் பெற தேவையான தகுதிகள்:
தொழில்நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாக நல்ல லாபமான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும்.
திட்ட மதிப்பு:
குறு மற்றும் சிறு
தொழில்களின் மொத்த தேவை 150
லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதற்கும் மேல்
தேவைப்பட்டால் ஒரு வருடத்திற்கு பிறகு பரிசீலனை செய்யபடும்.
கடன் தொகையின் அளவு:
புதிய தொழில்களாக
இருந்த திட்ட மதிப்பில் 80%
அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை பெற முடியும்.
நடைமுறை தொழிலாக
இருந்தால் திட்ட மதிப்பில் 75%
அதிகபட்சமாக ரூ.37.50 லட்சம் வரை பெற முடியும்.
பயனாளியின் பங்குத்
தொகை:
பயனாளியின் பங்காக குறைந்த
பட்சம் 25% தொழில் முதலீடாக கொண்டு வர வேண்டும்.
கடன் பெற தேவையான
சொத்து பிணையம்:
TIIC கிளைகள் – 125% சொத்து மதிப்பு
இருக்க வேண்டும்.
இதர வங்கிகள் – 150% சொத்து மதிப்பு
இருக்க வேண்டும்.
கடனை திரும்ப செலுத்தும் காலம்:
அதிக பட்சம் 06 ஆண்டுகள் வரை.
பில் பைனான்சிங் கடன் திட்டம் :
உற்பத்தி சாரா குறு, சிறு தொழில் நிறுவனங்கள் TNEB / TWAD /
TANSI / TNPL போன்ற முக்கிய நிறுவனங்களில் பெரும் கான்ட்ராக்ட் ஆர்டர்களின் மீது பெறப்படும்
பில்களுக்கு உடனடியாக கடன் பெற முடியும்.
கடன் தொகையின் அளவு:
TNEB / TWAD /
TANSI / TNPL போன்ற முக்கிய நிறுவனங்களில் பெரும் கான்ட்ராக்ட் ஆர்டர்களின் மீது
பெறப்படும் பில்களுக்கு 50% வரை உடனடியாக கடன் பெற முடியும்.
இதர கட்டணங்களின் விபரம்:
ப்ராசசிங் கட்டணம்: கடன் தொகையின் அளவை பொறுத்து மாறுபடும்
குறைந்த பட்சம் 1%. இத்தொகையினை திரும்ப பெற இயலாது.
புதுப்பித்தல் கட்டணம்: கடன் தொகையின் அளவில் 0.50% .
அபராத வட்டி: கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாத
பட்சத்தில் அபராத வட்டியாக 2.5% வசூலிக்கப்படும்.
கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 120 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
சேமிப்பு கிடங்கு
தொடங்க கடன் திட்டம் :
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களினால் உற்பத்தி செய்யபடும்
பொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு தேவையான கடன் வழங்கும்
திட்டம்.
தகுதிகள்:
தொழிற்பேட்டைகள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகில் நல்ல தொழில்
வாய்புள்ள இடத்தில் சேமிப்பு கிடங்குகள் அமைக்க இதில் கடன் பெறலாம். இதற்கு
தேவையான உபகரணங்களான ஓவர்ஹெட் கிரேன்ஸ், போர்க் லிப்ட், வெய்டிங் மெசின்ஸ் மற்றும்
குளிர்பதன கிடங்கு அமைக்கவும் கடன் பெறலாம்.
கடன் அளவு: தேவைகேற்ப கடன் வழங்கபடும்.
பயனாளியின் முதலீடு: திட்ட மதிப்பீட்டில் 35% சொந்த முதலீடாக கொண்டு வர வேண்டும்.
கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 9 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்(2 வருடங்கள் கடன் செலுத்த விடுப்பு காலம் உட்பட).
ஜெனரேட்டர் வாங்க
கடன் வழங்கும் திட்டம்:
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் மின்வெட்டினால் ஏற்படும்
இழப்பிடுகளை தவிர்க்க சொந்தமாக ஜெனரேட்டர் வாங்க கடன் வழங்கபடுகிறது.
தகுதிகள்:
அனைத்து குறு, சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களும்
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
கடன் அளவு: தேவைகேற்ப கடன் வழங்கபடும்.
பயனாளியின் முதலீடு: திட்ட மதிப்பீட்டில் 35% சொந்த முதலீடாக கொண்டு வர வேண்டும்.
கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்(6 மாதங்கள் விடுமுறை காலம் உட்பட).
கடன் பெற தேவையான
சொத்து பிணையம்:
மொத்த மதிப்பில் 50% சொத்து மதிப்பு
இருக்க வேண்டும்.
வணிக மையம் மற்றும்
திருமண மண்டபங்கள் கட்ட கடன் வழங்கும் திட்டம்:
இத்திட்டத்தில் நிலம் தவிர வணிக மையம் மற்றும் திருமண மண்டபங்களின்
கட்டிடம் கட்டுவதற்கும் மற்றும் உபகரணங்கள் வாங்குதற்கும் கடன் பெற முடியும்.
தகுதிகள்:
அனைத்து குறு, சிறு தொழில் சார்ந்த உரிமையாளர் / பங்குதாரர் மற்றும்
பதிவு பெற்ற தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
கடன் அளவு:
Ø உரிமையாளர் /
பங்குதாரர் தொழில்நிறுவனம் – 500 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.
Ø பதிவு பெற்ற தொழில்
நிறுவனங்கள் – 1,000 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.
பயனாளியின் முதலீடு: திட்ட மதிப்பீட்டில் 35% சொந்த முதலீடாக கொண்டு வர வேண்டும்.
கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 8 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்(2 ஆண்டுகள் ஆரம்ப விடுப்பு காலம் உட்பட).
கடன் பெற தேவையான
சொத்து பிணையம்:
மொத்த மதிப்பில் 50% முதல் 100% வரை திட்டத்தினை பொருத்து சொத்து மதிப்பு இருக்க
வேண்டும்.
இத்திட்டத்தில் மருத்துவதுறை சார்ந்த சித்தா, ஹோமியோபதி, அலோபதி,
ஆயுர்வேதிக் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த மருத்துவ மனைகள், நர்சிங் ஹோம்ஸ்
மற்றும் கிளினிக் நிறுவ கடன் பெறலாம். மேலும் ஆம்புலன்ஸ் வாங்கவும் இதில் கடன் பெற
முடியும்.
தகுதிகள்:
- Ø இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மருத்துவ துறை சார்ந்த MBBS / BAMS / BDS / BHMS போன்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி பயின்று போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Ø குறைந்த பட்சம் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- Ø விண்ணப்பதாரர் வயது 20 – 60 க்குள் இருக்க வேண்டும்.
- Ø மறு விற்பனை செய்த இயந்திரங்கள் வாங்க கடன் கிடையாது.
கடன் அளவு:
- Ø உரிமையாளர் / பங்குதாரர் தொழில்நிறுவனம் –குறைந்த பட்சம் 10 லட்சம் முதல் 150 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.
- Ø கிராமம் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் 40 லட்சம் வரை கடன் பெற முடியும். ஏனைய பகுதிகளில் 150 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.
பயனாளியின் முதலீடு:
- திட்டத்தின் உபகரணங்கள் மதிப்பீட்டில் 15%
- திட்டத்தின் கட்டிடங்கள் மதிப்பீட்டில் 25%
- திட்டத்தின் நிலம் மற்றும் கட்டிடம் மதிப்பீட்டில் 35% கொண்டு வர
வேண்டும்.
வாங்கும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் ( விடுமுறை காலம் உட்பட).
கடன் பெற தேவையான
சொத்து பிணையம்:
அரசு பணியில்
இருப்போர் அல்லது பிற மருத்துவரின் உத்திரவாதம் அளிக்க வேண்டும். பின்னர் அரசு
நிர்ணயிக்கும் சொத்து பிணையம் சமர்பிக்க பட வேண்டும்.
புதிய
தொழில்முனைவோர், தொழில்நிறுவன மேம்பாட்டு திட்டம்:
தமிழக முதல்வரின்
கனவு திட்டமான NEEDS திட்டத்தில் ஒரு கோடி வரை மானியத்துடன் கடன் பெற இங்கே விண்ணப்பிக்கலாம்.
மேலும் இத்திட்டம் பற்றிய விபரங்கள், தொழில் திட்ட அறிக்கைகள் மற்றும்
கடன் பெற வழிவகைகள் அனைத்திற்கும் எங்களை அணுகலாம்..
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross,
Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886
No comments:
Post a Comment